பயணம் அல்லது பிக்னிக் செல்லும்போது வழக்கமான பார்மல் உடையில் இல்லாமல் கேஷுவலாக உடை உடுத்திக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கும். இந்த பதிவில் இளம் பெண்களுக்கு ஏற்ற பிக்னிக் ஆடைகளை பற்றி பார்ப்போம்.
1. ஜீன்ஸ் மற்றும் பட்டன் வைத்த சட்டை;
இந்த உடை சௌகரியமானது மட்டுமல்ல நாகரீகமாகவும் இருக்கும். கிளாசிக் லுக் தரும். டார்க் வண்ண ஸ்கின்னி ஜீன்ஸ்க்கு லைட் கலர் ஷர்ட் நன்றாக இருக்கும். அதில் பட்டன்கள் வைத்திருந்தால் கூடுதல் அழகு சேர்க்கும்.
2. பூக்கள் டிசைன் போட்ட மேக்சி உடை மற்றும் தொப்பி;
இந்த உடை மதிய நேரத்திற்கு மிகவும் ஏற்றது. வெயில் தெரியாது. பார்க்கவும் அழகாக இருக்கும். அடர் வண்ண மேக்சியில் லைட் கலர் பூக்கள் இருப்பது சிறப்பு. கூடுதலாக தொப்பியும் அணிந்து கொண்டால், ரிச் லுக் தரும்.
3. கிராப் டாப் மற்றும் மிடி ஸ்கர்ட்;
வெயில் காலத்திற்கு ஏற்ற உடை இது. அடர் வண்ண நிறத்தில் ஸ்கர்ட்டும் வெள்ளை நிறத்தில் கிராப் டாப்பும் நன்றாக இருக்கும். கூடுதலாக ஒரு சன் கிளாஸ் அணிவது ஒரு கிராண்ட் லுக் தரும். இரவு நேரத்தில் ஒரு ஓவர் கோட் போன்ற ஜாக்கெட் அணிந்து கொள்ளலாம்.
4. பெரிய சைஸ் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ்;
வெயில் காலத்திற்கு ஏற்ற உடை இது. பார்க்க எளிமையானதாக இருந்தாலும் சௌகரியமானது மற்றும் ட்ரெண்டியாகவும் இருக்கும். இடுப்பில் ஒரு பெல்ட் அணிந்து கொள்ளலாம். இது ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். இதற்கு டென்னிஸ் ஷூக்கள் நன்றாக இருக்கும்.
5. த்ரீ ஃபோர்த் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்;
அடர் நிற டி-ஷர்ட் உடன் வெளிர் நிற பேண்ட் அல்லது அடர் நிற பேண்ட் மற்றும் வெளிர் நிற டி-ஷர்ட் அணியலாம். பிரகாசமான வண்ண டிஷர்ட் இன்னும் அழகு சேர்க்கும்.
6. சிங்கிள் பீஸ் கவுன் மற்றும் கேன்வாஸ் ஷூக்கள்;
டிசைன் போடாத பிளைன் ஆன சிங்கிள் பீஸ் கவுன் உடன் கேன்வாஸ் ஷூக்கள் அணிவது ட்ரெண்டி ஆன லுக் தரும். தேவைப்பட்டால் தொப்பியும் அணிவது அழகு சேர்க்கும்.
7. ஜம்ப் சூட்;
இந்த உடை மிகவும் வசதியான மற்றும் நாகரீகமான உடையாகும். ஜீன்ஸ்க்கு மாற்றாக இதை அணிந்து கொள்ளலாம். ஜம்ப் சூட்டுகள் பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன. பலவற்றில் பாக்கெட்டுகள் கூட உள்ளன. பழுப்பு மற்றும் தங்க நிற டிசைன்கள் வைத்த பச்சை நிற ஜம்ப் சூட் நன்றாக இருக்கும். பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் டிசைன் கொண்ட ஜம்ப் சூட்டும் நன்றாக இருக்கும். தேவைப் பட்டால் கூடுதலாக ஒரு பெல்ட் அணிந்து கொள்ளலாம்.
8. கிழிந்த ஜீன்ஸ் (Ripped jeans) மற்றும் ஒரு கிராஃபிக் டீ ஷர்ட்;
கிழிந்த ஒல்லியான ஜீன்ஸூம் கிராஃபிக் டீ ஷர்ட்டும் அருமையான காம்போவாக இருக்கும். டீ ஷர்ட்டை டக் - இன் செய்வது அவசியம். இது வெயில் காலத்திற்கு ஏற்றது. குளிர் காலத்தில் ஜீன்ஸுடன் க்ராப் டாப்பும் பொருத்தமாக இருக்கும்.