சருமத்தை மென்மையாக பராமரிக்க உதவும் பூக்கள்!
பூக்கள் இயற்கையின் அழகை மட்டுமல்ல நம் சருமத்தின் அழகையும் மேம்படுத்தும் சக்தி கொண்டவை. பண்டைய காலத்தில் இருந்தே பல்வேறு பூக்கள் சரும பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவில் சருமத்தை மென்மையாக்கும் சில முக்கிய பூக்கள் பற்றி பார்க்கலாம்.
பல பூக்களில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை நீரேற்றுவதற்கும், மென்மையாக்குவதற்கும், பளபளப்பாக மாற்றுவதற்கும் உதவுகின்றன. மேலும், சில பூக்கள் இயற்கையான ஆன்ட்டி இன்ஃபர்மேட்டரி, ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது பருக்கள், அரிப்பு, சரும பிரச்சனைகளை குறைக்க உதவும்.
சருமத்தை மென்மையாக்கும் பூக்கள்:
ரோஜா பூவின் இதழ்கள் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் முகப்பரு, அரிப்பு மற்றும் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
லாவண்டர் பூக்கள் அதன் ஆண்டி ஃபங்கல் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. இது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
செம்பருத்தி பூக்களில் விட்டமின் சி நிறைந்துள்ளன. இது சருமத்தை பிரகாசமாக்கி வயதான அறிகுறிகளை குறைக்க உதவும்.
கேமொமில் பூக்கள் சருமத்தை அமைதிப்படுத்தி எரிச்சலைத் தணிக்க உதவும். இது வறண்ட மற்றும் சென்சிட்டிவ் சருமத்திற்கு மிகவும் நல்லது.
காலென்டுலா பூக்கள் சருமத்தை ஆற்றி குணப்படுத்தும் தன்மை கொண்டவை. இது சருமத்தில் உள்ள காயங்களை ஆற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற பூக்களை ஒன்றாக அரைத்து தேன் அல்லது தயிர் போன்ற பொருட்களுடன் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். அல்லது பூக்களை நீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு முகத்தை துடைக்க பயன்படுத்தலாம். பூக்களின் எண்ணெயை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
பூக்கள் இயற்கையின் அற்புதமான பரிசுகள். இவை நம் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகின்றன. பூக்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை சருமப் பராமரிப்பு பொருட்கள் செயற்கைப் பொருட்களை விட மிகவும் பாதுகாப்பானவை. எனவே, இன்று முதல் உங்கள் சருமப் பராமரிப்பில் பூக்களுக்கு இடமளியுங்கள். இது நிச்சயம் உங்களுக்கான பலனை அளிக்கும்.