ஆடை முதல் அணிகலன்கள் வரை: பெண்களின் அழகு அலங்கார ரகசியங்கள்!

அழகு அலங்கார ரகசியங்கள்...
அழகு அலங்கார ரகசியங்கள்...Image credit - pixabay.com

வசரமாக வேலைக்கு போகும் போதும் மற்ற இடங்களுக்கு போகும் போதும் ஏதோ ஒரு டிரெஸ்ஸை போட்டுக் கொண்டு, தலைவாரிக் கொண்டு ஓடுவது வழக்கம் ஆகிவிட்டது. சில நேரங்களில் ஆவது கொஞ்சம் தம்மை அழகுபடுத்திக் கொண்டால் அதில் ஒரு சந்தோசம், தன்னம்பிக்கையும் பிறக்கும். அப்படியே நகை, உடை அணியும் போது நாம் கவனிக்க வேண்டிய சிலவற்றை இப்பதிவில் காண்போம். 

கோடைக்காலம் வந்து விட்டால் இரவு நேரங்களில் தினமும் படுக்கப் போவதற்கு முன் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் .மனதையும் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பொழுது உடம்பே ஏசி செய்தார் போல் ஆகிவிடும். சிறிது நேரம் முடிந்தால் தியானம் செய்துவிட்டு படுத்து தூங்கி எழுந்தால் முகமே பளபளப்பாகி விடும். அதன் பிறகு மேக்கப் செய்து கொண்டால் அன்று பகல் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படலாம்.

பெண்கள் இரவில் உறங்கும் போது பெரிய தலையணை வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் கழுத்து தடித்து அவலட்சணம் ஆகிவிடும். சிறிய மென்மையான தலையணைகளையே உபயோகிக்க வேண்டும்.

கண்களைப் பெரிதாக்கி காட்டிட கண் ரப்பைகளை அழகாக எடுத்துக்காட்டுவதற்கென உள்ள கர்லர்களை பயன்படுத்தி ஒப்பனை செய்து கொண்டால் கண்கள் பெரிதாகவும் எடுப்பாகவும் தோற்றமளிக்கும். 

முகப்பவுடர்களில் காம்பேக்ட் வகையே பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு உகந்தது. காம்பேட்டை ஒற்றி ஒற்றியே தடவ வேண்டும். இதை தடவிய பிறகு முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறைந்து முகம் பளிரனமின்னும். அதிலும் கூட அவரவர் சரும நிறத்திற்கு ஏற்ற காம்பேக்ட்டை கேட்டு வாங்க வேண்டும். 

நல்ல சிவப்பு நிறம் உடையவராக இருப்பவர்கள் அழுத்தமான வெள்ளை உடை அணிந்தால் அவர்களின் தோற்றம் பார்க்க நன்றாகவும் அழகாகவும் இருக்கும். 

கழுத்து செழிப்பாக இல்லாமல் ஒடுக்கமாக இருந்தால் காதுகளில் தொங்கும் ஆபரணமான ஜிமிக்கியை அணியாமல், காது மடல் ஒட்டினது மாதிரியான நகைகளை அணிந்தால், கழுத்து ஒடுக்கமாக இருப்பது தெரியாது. 

தங்கக் காதணிகள் மட்டுமே அழகு தரும் என்று அர்த்தம் இல்லை. வெள்ளி, இதர உலோகங்கள், பிளாஸ்டிக், தேங்காய் ஓடு போன்றவற்றாலும் காதணிகள் தயாரிக்கப்படுகின்றன. டீன் ஏஜ் பெண்களால் இவைகள் பெருமளவு வரவேற்கப்படுகின்றன. 

அழகு அலங்கார ரகசியங்கள்...
அழகு அலங்கார ரகசியங்கள்...Image credit - pixabay.com

பெண்களில் பெரும்பாலானோர் கற்கள் பதித்த மோதிரத்தை விரும்பி அணிகிறார்கள். பெண்கள் உடல் வாகுக்கும் நிறத்துக்கும் தக்கபடி மோதிரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக வேலைப்பாடு நிறைந்த மோதிரங்களை வாங்குவதை விட, கெட்டியான மோதிரங்களை வாங்கி அணிவதே சிறந்தது. 

பெண்களுக்கு பெரிய வளையல்களை விட அம்சமாக இருக்கும் மீடியமான அளவு வளையல்களே போதுமான அழகையும் அலங்காரத்தையும் தரும். மீடியம் வகை வளையல்கள் அதிகம் அணிந்தாலும் பார்க்க அழகாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய அளவு வளையல்களில் ஒன்று இரண்டு அணிந்தாலே போதுமானது. 

பொருத்தமான கற்களை நெக்லஸில் பதித்தால் பெண்களின் அழகுக்கே அது மெருகேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. எல்லா நாட்களிலும் கல்வைத்த நெக்லஸ்களை அணியக்கூடாது. நெக்லஸின் கற்களுக்கு பொருத்தமான புடவையும் உடுத்த வேண்டும். எப்போதுமே பெண்கள் தேவைக்கு அதிகமான அளவு நகைகளை கழுத்தில் அணியக்கூடாது. நகைகள் ஒன்றோடு ஒன்று உராயும் போது கீறல் தோன்றும். 

அதனால் ஆபரணத்தின் பொலிவு குறைய கூடும். ஆதலால் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை விட அதை பராமரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிடைத்தற்கரிய 10 உலர் பழங்கள்!
அழகு அலங்கார ரகசியங்கள்...

சுருள் சுருளான கூந்தல் உடைய பெண்கள் பின்னலின் முனையை ரிப்பன் கொண்டு முடியக்கூடாது. முனையை அப்படியே விட்டுவிட வேண்டும். அப்பொழுது பின்னல் உங்கள் தோற்றத்தின் அழகை அதிகரித்துக் காட்டும். 

இதுபோல் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்கி அழகுப்படுத்திக் கொண்டால் வெளியில் செல்லும் பொழுது சரியாக போகிறோம் என்ற திருப்தி கிடைக்கும். கூடவே சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவித்த உணர்வு கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com