சில நாட்கள் சருமத்தைப் பராமரிக்கவில்லை என்றால், பருக்கள், தழும்புகள், சுருக்கம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் போட்டிப்போட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன. அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வுதான் கொய்யா இலைகள்.
அந்தவகையில் கொய்யா இலைகளின் பலன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றிப் பார்ப்போம்.
1. கோடைக் காலங்களில் வெளியே செல்லும்போது முகத்தின் நிறம் கருமையாக மாறும். மேலும் முகத்தில் கரும்புள்ளிகளும் தோன்றும். அதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு கொய்யா இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பிறகு அந்த நீரை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் அப்ளே செய்துக்கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவினால், சருமத்தின் கருமை நீங்கும்.
2. Histamine என்ற பொருளை உடல் வெளியேற்றும்போது, வீக்கம், அழற்சி ஆகியவை அறிகுறிகளாகத் தோன்றும். கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகையால், இவை Histamine உற்பத்தியைத் தடுக்கின்றன. டெர்மடிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா இலைகளை பசும்பாலுடன் சேர்த்து அரைத்து அப்ளை செய்து வந்தால், மிக வேகமாக டெர்மடிடிஸ் பிரச்சினையைத் தீர்க்கலாம்.
3. முகத்தில் பருக்கள் உண்டாவதற்கான பேக்டிரியாக்களை, கொய்யா இலைகளின் பேக்டிரியா அழிக்கிறது. ஆகையால், கொய்யா இலைகளை அரைத்து அதன் சாரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் நீங்கும்.
4. சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், துளைகளை நீக்கக் கொய்யா இலை நீர் உதவுகிறது. இது இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
5. மேலும் கொய்யா இலைகள் மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது.
கொய்யா இலைகளைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகள் செய்வதைப் பற்றி பார்ப்போம்:
கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட்டாக்கி, அதனை தேனுடன் கலந்து முகத்தில் தடவி வரலாம். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் களித்து முகத்தைக் கழுவலாம். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு தக்காளியை நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன், கொய்யா இலையின் பேஸ்ட் சேர்த்து முகத்தில் தடவலாம். பின்னர் 7 அல்லது 8 நிமிடங்களில் சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்துப் பார்க்கலாம்.
அதேபோல், ஒரு தேக்கரண்டி கொய்யா இலை பேஸ்ட் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் சமமாகத் தடவ வேண்டும். ஒரு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை வாரம் ஒருமுறைப் பயன்படுத்தலாம்.
இந்த மூன்று ஃபேஸ் பேக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து முயற்சி செய்துப் பாருங்கள். முகச்சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.