உங்கள் மெலிதான கூந்தல் அடர்த்தியாக வளரணுமா?

Want your thinning hair to grow back thicker?
hair care tips
Published on

லைமுடி மெலிந்து காணப்படுவது பலபேருடைய இன்றைய தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. மரபணு, ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருத்தல், மன அழுத்தம் மற்றும் ஒரு சில மருந்துகள் காரணமாக தலைமுடி மெலிந்து போகிறது. தலைமுடி மெலிந்து போவதை தவிர்க்க உதவும் இயற்கையான சில தீர்வுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. உணவு மாற்றங்கள்

தலைமுடி மெலிந்து போவதை தடுப்பதற்கு உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஜிங்க் மற்றும் பயோடின் ஆகியவை நிறைந்த வஞ்சிரம் மீன், வால்நட் மற்றும் முட்டைகள் போன்றவை தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் வைட்டமின் D மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. ஹேர் கலர் மற்றும் ப்ளீச்சிங்

தலைமுடி மெலிந்து போவதற்கு ஹேர் கலர் மற்றும் ப்ளீச்சிங்கும் ஒரு காரணமாகும். அளவுக்கு அதிகமாக கெமிக்கல்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் மயிர் கால்கள் சேதமடைவதால் இவற்றை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக இயற்கையான முறையில் பொருட்களை பயன்படுத்தி தலைமுடி சேதத்தை குறைத்து ஆரோக்கியமானதாக மாற்றவேண்டும்.

3. புளித்த தயிர்

புளித்த தயிரில் உள்ள புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் மயிர் கால்களுக்கு தேவையான உஷாக்குகளை வழங்குவதோடு, தலைமுடி மெலிந்து போவதை தடுக்கிறது. தயிரில் ஊறவைத்த வெந்தய விதைகளை பேஸ்ட் ஆக பயன்படுத்துவது தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, முடி மெலிந்து போவதை இயற்கையாகவே குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
அழகிலும் ஆரோக்கியத்திலும் சந்தனத்தின் பயன்கள்!
Want your thinning hair to grow back thicker?

4. எண்ணெய் பயன்படுத்தி மசாஜ்

வழக்கமான முறைகளில் மயிர்கால்களில் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது.  தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் தலைமுடி மற்றும் மயிர் கால்களை மசாஜ் செய்யலாம்.

மேற்கூறிய நான்கு வழிமுறைகள் வாயிலாக தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தி போஷாக்கான கூந்தலுக்கு அடித்தளமிட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com