ஸ்கூல் டென்ஷனிலும் குழந்தைகளின் கூந்தலை அழகாக்க எளிய வழிகள்!
முடி பராமரிப்பு என்பது பெரியவர்களை மட்டுமல்லாது, பள்ளி செல்லும் வளரும் குழந்தைகளையும் வாட்டும் விஷயம்தான். ஆனால் குழந்தைகளின் முடியை சிறிது மென்மையாக கையாளவேண்டும்.
இதோ அதற்கான சில எளிய வழிகள் (Hair care tips):
வாரத்துக்கு இருமுறை நல்ல ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்தல் போதுமானது. தினமும் ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வியர்வை அதிகமாக இருந்தால் தண்ணீரால் மட்டும் கழுவலாம்.
குழந்தைகளுக்கான மைல்ட் ஷாம்பூ, கண் எரியாத, கெமிக்கல் குறைவான ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. பெரியவர்கள் பயன்படுத்தும் ஷாம்பூ குழந்தைகளுக்கு அலர்ச்சி ஏற்படுத்தும்.
வாரத்துக்கு இரண்டு தடவை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, லைட்டாக மசாஜ் செய்துவிட்டு தலைக்கு குளிக்கலாம்.
தலை ஈரம் போக காயவைக்க வேண்டும். பள்ளிக்கு போகும் முன் முடி முழுவதும் உலர்ந்திருக்க வேண்டும். ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஈரமாக இருந்தால் தூசி ஒட்டும், தலை முடி சிக்கு விழ வாய்ப்பு அதிகம்.
டைட்டாக, ரொம்ப இழுத்து பின்னாமல் லூஸ் பின்னல் போதும். இல்லை என்றால் முடியின் வேர்க்கால்கள் இழுக்கப்பட்டு வலி உண்டாகும், முடி உதிரும்.
தலையில் மெட்டல் உள்ள ரப்பர் பயன்படுத்த வேண்டாம்.
துணி ரிப்பன் அல்லது சாஃப்ட் ரப்பர் பேண்ட் நல்லது. அதிக இறுக்கமாகவும் போடக்கூடாது.
நல்ல தரமான ரப்பர் பேண்ட்கள் தேர்ந்தெடுப்பது முடியை சிக்கிலிருந்து காக்கும்.
தலை முடி வாரும்போது முதலில் விரல்களால் கோதி சிக்கலை எடுத்து விட்டு, நிதானமாக சீப்பால் வாருங்கள். சீப்பு போடும்போது முடி சிக்கினால் இழுக்காதீர்கள். பொறுமையாக நுனி வரை வாருங்கள்.
சத்தான உணவுகளை அதிகம் கீரை, காய்கறி, பழங்கள், பருப்பு, முட்டை, பால் – இவையெல்லாம் சாப்பிட்டால் முடி உதிர்வு குறையும்.
ஹேர் ஜெல், கலர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். முடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
வெயிலில் அதிக நேரம் விளையாட போகும்போது தலைக்கு தொப்பி போடுவது, தலை முடியை வறட்சியிலிருந்து பாதுகாக்க உதவும்.

