உலகில் மிகவும் விலை உயர்ந்த தாமரைப் பட்டு துணி துணிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Lotus Silk
Lotus Silk

ந்தியா கலாச்சாரத்திலும் கலைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு நாடு. அதேபோல் பாரம்பரிய பட்டுக்கும் பேர் போன இந்திய நாட்டில் தாமரை மூலம் தயாரிக்கப்படும் பட்டு பற்றிக் கேள்வி பட்டுள்ளீர்களா?

ஆம்! தாமரை பட்டினால் செய்யப்படும் ஆடைகள் மிகவும் எடை குறைவாகவும் பல நாள் உழைக்க கூடியதாகவும் அதேபோல் மிகவும் மென்மையாகவும் இருக்கும். அந்தவகையில் தாமரைப் பட்டு பற்றிய சுவாரசிய விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தாமரையின் நார் மூலம் செய்யப்படும் இந்த பட்டு தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமானது. ஆம்! தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் தாமரைப் பட்டு துணிகளை அதிகம் பார்க்கலாம். பொதுவாக மற்ற நார்களை விட தாமரை நார்களுக்கு வலு அதிகம். முதலில் தாமரையின் தண்டுப் பகுதியை எடுத்து நூல் பிரியும் வரை சுட வைத்து, அதன்பின் அந்த நுல்களைப் பட்டாக மாற்றுவார்கள்.

Lotus Silk
Lotus Silki.insider.com

வரலாறு:

1900 களில் மியான்மரில் உள்ள கியாங்கான் என்ற இடத்தில் இருந்த இன்லி ஏரியிலிருந்த தாமரைகளைப் பறித்துதான் தாமரைப் பட்டு முதன்முறையாக செய்யப்பட்டது. அந்த கிராமத்தில் இருந்த கியா திங்கன் என்ற ஒரு புத்த துறவித்தான் முதன்முதலில் தாமரைப் பட்டினால் செய்யப்பட்ட ஆடையை உடுத்தியவர்.

பின்னர் மியான்மரில் நடைபெறும் Tazaungdaing என்ற திருவிழாவில் தாமரை பட்டு துணியை செய்யும் ஒரு போட்டி வருடா வருடம் நடைபெற்றது. இதன்மூலம் தாமரைப் பட்டின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்தது. அதன்பின்னர் துன் யீ மற்றும் ஓன் கயி ஆகியோர்கள் தாமரைப் பட்டு பயன்படுத்தி செய்யும் ஆடைகளின் அடுத்தக் கட்டத்திற்கு சென்று சற்று நவீனமாக்கினார்கள். 2017ம் ஆண்டுத்தான் இது வியட்நாம் நாட்டிற்கு சென்றது. அதேபோல் 2019ம் ஆண்டுத்தான் மனிப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இந்தப் பட்டு அறிமுகமானது.

Lotus Silk Making
Lotus Silk Making

 பலன்கள்:

தாமரை பட்டு ஆடைகளின் நிறம் தண்ணீரில் கரையாது. அதேபோல் துவைப்பதற்கு அதிக நீரும் எடுத்துக்கொள்ளாது. தாமரைப் பட்டாடைகள் செய்வது மிகவும் எளிய முறை மட்டுமல்லாது சூற்றுசூழலையும் பாதுகாக்க உதவும். பட்டுப் பூச்சிகள் போன்றவற்றை கொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

பொதுவாக தாமரை நார் மிகவும் வலிமையானதால், அதன் மூலம் செய்யப்படும் இந்த ஆடைகளும் அவ்வளவு சீக்கிரம் கிழியாது, மங்கிப் போகாது. அதேபோல் இது எடை குறைவானதால் கோடைக் காலங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்

மேலும் இதில் எளிதாக சாயம் செய்யலாம் என்பதால், விதவிதமான வடிவமைப்புகளையும் கண்கவர் நிறங்களிலும் ஆடைகள் தயாரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வேட்டி - பற்றிய அற்புதத் தகவல்கள்!
Lotus Silk

எப்படி பாதுகாப்பது:

இந்த தாமரைப் பட்டுக்கொண்ட ஆடைகளை சுடு நீரில் மென்மையான துணி பவுடர் பயன்படுத்தி துவைக்க வேண்டும். மிகவும் அழுத்தி தேய்க்காமல் நீரில் அலசினாலே போதும் சுத்தமாகிவிடும்.இந்த துணியை கடுமையான நேரடி வெயிலில் காய வைக்க வேண்டாம். கொஞ்சம் மிதமான சூட்டில் வெகு நேரம் காய வைத்தாலே போதும்.

அதேபோல் ஈரமாக இருக்கும்போது அயன் செய்யாதீர்கள். நன்றாக காய வைத்தப் பிறகு லேசான சூட்டில் அயன் செய்யுங்கள்.அதிக சூடு இல்லாத பகுதியில் மடித்து வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக, இவ்வாறு தாமரை பூவின் மூலம் கிடைக்கும் பட்டு நூல் மூலம் பட்டுப்பூச்சிகள் கொல்லப்படுவதும் தடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com