கோடை காலத்திற்கான (அக்னி நட்சத்திரம்) ஆரோக்கிய குறிப்புகள்!

அக்னி நட்சத்திர நாட்களில்...
அக்னி நட்சத்திர நாட்களில்...

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் அக்னி நட்சத்திர நாட்களில் அதிக வியர்வை, வேர்க்குரு, நீர் இழப்பு, அம்மை, சூட்டினால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சனை ஆகியவை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு அதிக அளவில் இருக்கும்.

சாதாரணமாகவே வெயில் காலத்தில் வியர்த்து கொட்டும். அதுவும் அக்னி நட்சத்திர நாட்களில் சொல்லவே வேண்டாம்.

இந்த சமயத்தில் நம் சருமத்தில் கூடுதல் கவனம் தேவை. சருமம் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்க ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை முகத்தை கழுவலாம்.கோடையில் அதிக மேக்கப் இன்றி இருப்பது நம் சருமத்தை பாதுகாக்க உதவும். 

முகத்தில் பருக்கள், வடுக்கள் ஏற்படாமல் இருக்க இந்த சமயத்தில் அதிகளவு அழகுசாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் அல்லது துளைகளை அடைக்கலாம். அதிகப்படியான வெப்பம் உடலில் வறட்சியையும், முடி உதிர்வதையும், தோல் வெடிப்புக்கும் வழிவகுக்கும். எனவே லேசான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. எனவே அதிக நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி சருமத்தை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது.

தக்காளி, பப்பாளி, வெள்ளரிக்காய், தர்பூசணி, பெர்ரி, மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதுடன் சிறிதளவு பழத்தை குழைத்து பேஸ்டாக்கி முகத்தில் தடவி வர சருமம் பளபளப்பாக அழகு பெறும்.

வெயிலின் தாக்கம் ...
வெயிலின் தாக்கம் ...

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் அக்னி நட்சத்திர நாளில் அதிக வியர்வை, வேர்க்குரு, நீர் இழப்பு, அம்மை, சூட்டினால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சனை ஆகியவை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு அதிக அளவில் இருக்கும். இந்த சமயத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வெப்ப நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நம் உணவு பழக்கத்தில் சில மாறுதல்களை செய்து கொள்ளலாம். 

அதிகப்படியான கொழுப்புள்ள உணவுகள், காரம், வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதை குறைத்துக் கொண்டு அதிக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதிகம் பாலிஷ் செய்யப்படாத அரிசி, கேழ்வரகு, சோளம், பருப்பு வகைகள் எடுத்துக் கொள்ளலாம். அதிக இனிப்பு, சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களையும், காஃபின் கலந்த பானங்கள் மற்றும் ஆல்கஹாலையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

வெயில் நாட்களில் உடற்பயிற்சி அதிக அளவு செய்வதை குறைத்துக் கொண்டு உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்கலாம். அதிக அளவு உடற்பயிற்சி செய்ய அதிகமான அளவு வியர்வை ஏற்படும். 

இதையும் படியுங்கள்:
வெப்பம் நம்மை மட்டுமா சுடும்? ஐந்தறிவு ஜீவன்கள் என்ன செய்யும்?
அக்னி நட்சத்திர நாட்களில்...

காற்றோட்டமான இறுக்கமில்லாத உடைகளை தேர்வு செய்து அணியலாம். குறிப்பாக இந்த சமயங்களில் பருத்தி ஆடைகளை அணிவது காற்றோட்டமாக நம்மை வைப்பதுடன் வேர்வையையும் உறிஞ்சி கொள்ளும். 

அதிக அளவு வியர்வையை வெளிப்படுத்தக்கூடிய அக்குள் போன்ற பகுதிகளில் வேர்வை மிகுதியால் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு குளிக்கும் சமயம் எலுமிச்சைசாறு சிறிதளவு கலந்த நீரில் குளிப்பது, யூகலிப்டஸ் ஆயில் இரண்டு சொட்டு நீரில் கலந்து குளிப்பதும் வியர்வை துர்நாற்றத்தை உண்டு பண்ணாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com