முகம் பளபளப்பாக இருந்தால் அது ஆரோக்கியத்தின் அறிகுறிதான். முகத்தை பளபளப்பாக்க இயற்கை வழிகளைப் பார்ப்போம்.
* புதினா இலையை மட்டும் கைப்பிடி அளவு எடுத்து சட்னிபோல் அரைத்து முகம் முழுவதும் பூசி வறண்டதும் கழுவ முகம் பளபளப்பாக இருக்கும்.
* பாலில் சில சொட்டு எலுமிச்சை சாறைவிட தயிர்போல் கெட்டியாகும். அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து கிரீம் போல் முகத்தில் பூசி, அரை மணிநேரம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவ முகம் பிரகாசிக்கும்
• ஆரஞ்சுப் பழத்தை சாறு பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்களுக்குப் பிறகு சீயக்காய் தூள் அல்லது பயித்த மாவினால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
*வெள்ளரியில் சாறெடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தின் எல்லாம் பகுதியிலும் படும்படி தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச் சென்று பளபளக்கும்.
* கொழுந்து வெற்றிலையையும், புதினாவையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள் இதை ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து துணியில் வைத்து பிழிந்தால் சாறு வரும் அதை மோருடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பொலிவாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை இடித்து சாறு பிழிந்து சமமாக தேன் கலந்து முகத்தில் தடவினால் முகம் அழகு பெறும் ஒரு மணி நேரம் கழித்து துடைத்து கழுவவும்.
*சிறிய தக்காளி ஒன்று. ஒரு துண்டு அன்னாசி. 5 திராட்சைப்பழம், ஆரஞ்சு ஒரு சுளை இவைகளை சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவ முகம் பிரகாசிக்கும்.
*பாலாடை அல்லது தயிர் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு அரை ஸ்பூன், துவரம்பருப்பு பொடி ஒரு ஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்று ஆகும்.
*வெறும் தயிரை மட்டும் கிரீம்போல் கெட்டியாக எடுத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தோல் மென்மையாகும். பாலை புளிக்கச் செய்யும் கிருமிகள் தயிரில் இருப்பதால் அவை தோலை மென்மையாக்கும்.
*தர்பூசணிச்சாறு, வெள்ளரிச்சாறு, பாலாடை இவற்றை சம அளவில் எடுத்துக் கொஞ்சம் பன்னீர் கலந்து முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவி வர முகம் பளிச்சென்றாகி விடும்.
*பாலை முகத்தில் தடவிக் கொண்டு காய்ந்தவுடன் கழுவி விடுங்கள். பால் போன்ற முகம் உங்களுக்கு பரிசாக கிடைக்கும்.
*ஒரு தேக்கரண்டி தேன். இரண்டு தேக்கரண்டி வெதுவெதுப்பான பால் இரண்டையும் கலந்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசவும் ஐந்து நிமிடம் கழுவிவிட முகம் பளபளப்பாகும்.
*பெண்களின் முகம் மிருதுவாக இருக்க நன்கு பழுத்த பப்பாளியை மசித்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.
இத்தகைய இயற்கை வழிமுறைகளை கையாண்டு அழகுக்கு அழகு சேருங்கள்.