குளிர்காலத்தில் சருமத்தை பொலிவுடன் வைக்க சில டிப்ஸ்கள்!

சருமத்தை பொலிவுடன் வைக்க...
சருமத்தை பொலிவுடன் வைக்க...pixabay.com
Published on

குளிர்காலத்தில் குளிரின் பாதிப்பினால் சருமம் வறண்டு போகும். பொடுகு தொல்லை உண்டாகும். சரும நிறம் மங்கிவிடும். உதடுகள் வெடிப்புக்கு உள்ளாகும். அரிப்பு மற்றும் சரும எரிச்சல் உண்டாகும். இவைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் சீரான முறையில் பராமரிப்பு வேண்டும். நாம் சாப்பிடும் உணவிலும் கூட கவனமாக ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கும் உணவுகளாக சாப்பிட வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்pixabay.com

லிவ் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் கருமம் வறண்டு போகும்போது இதில் வைட்டமின் ஈ ,ஏ மற்றும் இதர கனிமங்களும் இயற்கையான கொழுப்பு அமிலங்களும் நிறைய உள்ளது. அதனால் சருமத்திற்கு நீர் சேர்த்து அளித்து அதன் நெகிழ்வுத் தன்மை மற்றும் மேன்மை தன்மையை பராமரித்திடும். குளிப்பதற்கு முன்பு வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணையை முகம் கைகளில் பின்புறம், தோள்பட்டை மற்றும் முட்டிகளில் நன்றாக தடவிக்கொண்டு மென்மையாக மசாஜ் செய்து பின்பு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சருமம் வழுவழுப்பாகவும் மென்மையாகவும் மாறும்.

பப்ளிமாஸ்

பப்ளிமாஸ்
பப்ளிமாஸ்

ப்ளிமாஸ் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இந்த ஆண்டி ஆக்சிடென்ட் உங்கள் சருமத்தை இயக்க உறுப்புகளில் இருந்து ஏற்படும் பாதிப்பு இருந்து பாதுகாக்கும். மேலும் இது லைசோபில் உள்ளதால் உங்கள் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சுருக்கங்களையும் வயதான தோற்றத்தையும் தடுக்கும்.

பப்ளிமாஸ் சாறு அரை டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் அரை கப் ஓட்ஸ் பொடியுடன் கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் வழுவழுப்பாகவும் இயற்கையான பொலிவோடும்.திகழும்..

அவகேடோ

அவகேடோ
அவகேடோ

குளிர்காலத்தின் வறட்சியான சருமத்தை இதமாக்க வெண்ணெய் பழம் எனும் அவகேடோ பழத்தை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்கள் ஏ,சி ,ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைய உள்ளது. அதனால் சருமத்திற்கு போதிய ஈரப்பதம் கிடைக்கும். சருமத்திற்கு இளமையான தோற்றத்தையும் அளிக்கும். வெண்ணெய் பழத்தின் சதையை பிசைந்து எடுத்து அதனுடன் தேன் ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பிறகு வெதுவெதுப்பான  நீரில் முகத்தை கழுவினால் முகம் அதிக பளபளப்புடன் திகழும்.

கேரட்

கேரட்
கேரட்

கேரட்டுகளில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைய இருப்பதால் அது சருமத்தை குளிர் காலத்திலும் கூட ஆரோக்கியமாகவும் பொலிவோடும் வைத்திட உதவும். சுருக்கங்கள் சீரற்ற சரும நிறம் போன்ற வயதாகும் அறிகுறிகளை தடுக்கும். மசித்த கேரட் இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் பால் கிரீம் ஒரு டீஸ்பூன் சேர்த்து சிறிதளவு முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் மென்மையாக பளிச்சென்று இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com