செழிப்பான கூந்தலுக்கு செம்பருத்தி: ஒரு இயற்கை ரகசியம்!

beauty tips
Hibiscus for lush hair
Published on

ருத்தி வகையில் ஒன்றான செம்பருத்தி அழகைக் கூட்டி ஆரோக்யத்திற்கு வழிகாட்டுகிறது. இதன் காய், பட்டை, வேர், இலை என அனைத்திலும் அழகுப் பலன்களை கொண்டுள்ளது.

எண்ணெய் பசையின்றி வறண்டு போன சருமத்தையும் பளபளப்பாக உதவுவது செம்பருத்தி எண்ணெய். 500மிலி ந எண்ணையைக் கொதிக்கவைத்து அதில் 3கைப்பிடி உலர்ந்த செம்பருத்தி பூக்களை போட்டு மிதமான நெருப்பில் வைத்து காய்ச்சவும். ஓசை அடங்கி நல்ல வாசனை வந்ததும் இறக்கி ஒருநாள் கழித்து வடிகட்டவும். அடியில் தங்கியிருக்கும் பூவை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எண்ணையுடன் சேர்க்கவும். இந்த எண்ணையை தினமும் தடவி வர சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

உலர்ந்த செம்பருத்தி பூ-25கிராம், உலர்ந்த செம்பருத்தி இலை -25கிராம்சேர்த்து தணலில் இட்டு எரிக்கவும்.அதில் கருகி வரும் கரியை விளக்கெண்ணெய் உடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை பிரஷ் ஷினால் புருவம், கண் இமை பகுதிகளில் தடவி வர கருகருவென முடி வளரும்.

செம்பருத்தி பூக்களை போட்டு கொதிக்க விட்டு ஆறியதும் அந்த தண்ணீரால் முடியை அலச பளபளவென கண்டிஷனர் போட்டதுபோல நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
முகத்தில் மருக்களா? நிரந்தரமாக நீக்க இதோ சில டிப்ஸ்!
beauty tips

கொட்டை நீக்கிய புங்கங்காய் தோல், உலர்ந்த செம்பருத்தி பூ, காய்ந்த செம்பருத்தி இலை, பூலான் கிழங்கு, பயத்தம் பருப்பு எல்லாம் தலா 50கிராம் எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.இந்த பவுடரை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் கூந்தல் பட்டுப் போல் மின்னும்.

முடி வளர்ச்சியை தூண்டி வளரவைக்கும் சக்தி செம்பருத்தி ஹேர் ஆயிலுக்கு உண்டு.

அரை கிலோ தேங்காய் எண்ணெயில் முப்பது செம்பருத்தி பூக்களை போட்டு  காய்ச்சி உலர்ந்த ரோஜா இதழ்-5கிராம், உலர்ந்த தாமரை, மகிழம் பூ, ஆவாரம்பூ இதழ்கள்-தலா 10கிராம் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி ஆற விடவும். ஒரு பாட்டிலில் ஊற்றி வெயிலில் வைத்து எடுக்கவும்.

இந்த எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, நறுமணத்தையும் தருகிறது.

-மகாலெட்சுமிசுப்ரமணியம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com