
ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு முடிந்துவிட்டது. ஆனால், பண்டிகையின் உச்சகட்ட நிகழ்ச்சியாய்த் திகழ்ந்த, வண்ணப் பொடிகளை முகத்தில் பூசி மகிழ்ந்த தருணங்களின் நினைவாய் முகத்தில் தங்கிவிட்ட கறைகளை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. இக்கறைகளை நீக்க உதவும், வீட்டில் உள்ள ஏழு பொருட்கள் என்னென்ன என்பதையும் அதை எப்படி உபயோகிப்பது என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.
ஆயில்: தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பேபி ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை முகத்தில் தடவி மிருதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் ஒரு மெல்லிய காட்டன் துணியால் முகத்தைத் துடைத்துவிடுங்கள்.
பால்: பருத்திப் பஞ்சை சிறிய பந்து அளவுக்கு உருட்டி எடுக்கவும். பின் அதை திக்கான குளிர்ந்த பாலில் முக்கி எடுத்து முகத்தில் உள்ள கலர் திட்டுகளின் மீது மெதுவாகத் தடவி கலரை வழித்தெடுக்கவும்.
யோகர்ட்: பிளைன் யோகர்டை முகத்தில் தடவவும். சில நிமிடங்கள் அதை அப்படியே விட்டுவிடவும். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவிவிடவும்.
லெமன் ஜூஸ்: லெமன் ஜூஸை சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து பிறகு முகத்தைக் கழுவிவிடவும்.
பேகிங் சோடா (Baking Soda): பேகிங் சோடாவில் தண்ணீர் கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். பின் அதை முகத்தில் பூசி சில நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் முகத்தை நன்கு கழுவித் துடைக்கவும்.
டூத் பேஸ்ட்: சிறிதளவு டூத் பேஸ்டை விரல் நுனியில் எடுத்து வண்ணப் பொடியின் கறை படிந்துள்ள இடத்தில் மெதுவாகத் தடவவும். பிறகு அந்த இடத்தை தண்ணீரால் கழுவிவிடவும்.
வெள்ளரி: ஒரு முழு வெள்ளரிக்காயைத் துருவிக் கொள்ளவும். பின் அதிலிருந்து ஜூஸைப் பிழிந்தெடுக்கவும். அந்த ஜூஸை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு முகத்தை தண்ணீரால் கழுவி விடவும்.
மேற்கூறிய வழிகளைப் பின் பற்றி முகத்தில் படிந்த வண்ணக் கறைகளை நீக்குங்கள். முக அழகை மீட்டெடுங்கள்.