

நமது உடல் காலத்துக்கேற்ப மாறி கொள்ளும் என்றாலும், சருமத்தில் மாற்றம் ஏற்படும். முக்கியமான மாற்றம் வறட்சி தான். குளிர்காலம் ஆனாலும், வெயில் காலம் ஆனாலும் பலரது சருமம் வறட்சியடையும். இதனால் முகம் சொரசொரப்பாக காணப்படும். இதனை போக்க நாம் மாய்ச்சுரைஸர்கள் உபயோகிப்போம்.
இதனை பயன்படுத்துவதால் தற்காலிக பலனையே பெறமுடியும். இயற்கை நமக்கு பல மாய்ச்சுரைஸர்களை விட்டு சென்றுள்ளது. அதனை பயன்படுத்துவதால் நமது சருமம் இயற்கையாகவே வறட்சியடைவதை தடுக்க முடியும்.
எண்ணெய் தரும் மென்மை:
பாதாம், எள் மற்றும் தேங்காய் போன்ற முக்கியமான எண்ணெய்களில் 10 தேக்கரடிண்டிகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை ஒன்றாக கலக்கி ஒரு பாட்டிலில் வைக்கவும். குளித்து முடித்த பின்னர் இந்த கலவை எண்ணெய்யை முகத்தில் தேய்த்து வர முகம் பளபளப்பாக மாறிவிடும். இதை உடல் முழுவதும் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
சரும புத்துணர்வுக்கு வெள்ளரி:
வெள்ளரிக்காயுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவறை கலக்கி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து அடிக்கடி பயன்படுத்தி வந்தால் சருமம் புத்துணர்வு பெறும்.
வறட்சியை நீக்கும் கற்றாழை:
வறண்ட சருமத்திற்கு கற்றாழை சாற்றை இரண்டு தேக்கரண்டிகள் எடுத்துக் கொண்டு, பாதாம் எண்ணெய் ஒரு தேக்கரண்டி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி அளவிற்கு உள்ள கரைசலில் கரைக்கவும். இந்த கரைசல் உங்களுடைய வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மிகவும் உதவும்.
சாதாரண சருமத்திற்கு 4 தேக்கரண்டிகள் கற்றாழை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை கலக்கி, அறையின் வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கவும். இந்த கரைசலை சாதாரண தோலை ஈரப்பதமாக வைக்கும் மாய்ஸ்சுரைசர் ஆக பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
சென்சிட்டிவ் சருமங்களை பாதுகாக்கும் ரோஜா இதழ்:
ரோஜா இதழ்களை சில துளிகள் ரோஸ் வாட்டரில் வைத்து கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி, 2 தேக்கரண்டிகள் கற்றாழை சாறை சேர்க்கவும். இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மென்மையான ஈரப்பதம் மிக்க சருமத்தை பெற தடவி விடலாம். இந்த மாய்ஸ்சுரைசரையும் சென்சிடிவ் சருமங்களில் பயன்படுத்தலாம்.
சருமத்தை பாதுகாக்கும் பால்:
2 தேக்கரண்டி சுத்தமான ஆலிவ் எண்ணெயை எடுத்து, பாலுடன் கலக்கவும். இரண்டு தேக்கரண்டிகள் எலுமிச்சையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மென்மையான சருமத்திற்கு இது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.