புரோட்டீன் ஹேர் மாஸ்க் வீட்டிலேயே செய்யலாமே... அப்பாடா, இனி காசு மிச்சம்!

Protein hair mask
Protein hair mask
Published on

நவீன வாழ்க்கை முறை, மாசுபாடு, அதிகப்படியான ஹேர் ஸ்டைலின் கருவிகளைப் பயன்படுத்துவதால் நமது தலைமுடி பலவீனமாகவும் உயிரற்றதாகவும் மாறி வருகிறது. இதனால், முடி உதிர்தல், பொலிவு இழப்பு, சேதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைகளை சரி செய்ய புரோட்டீன் ஹேர் மாஸ்க் உதவுகிறது. புரோட்டின் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இது முடிக்கு வலுவையும் நெகிழ்வுத் தன்மையையும் அளிக்கிறது. சந்தையில் பலவகையான புரோட்டீன் ஹேர் மாஸ்க் கிடைத்தாலும், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் புரோட்டீன் ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • முட்டை - 1 

  • தேன் - 1 ஸ்பூன்

  • ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்

  • தயிர் - 2 ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். மஞ்சள் கரு, வெள்ளை கரு இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், அதில் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் தயிர் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமல் இருக்கலாம். 

இந்த கலவையை முடியின் வேர்களில் இருந்து முனைகள் வரை தடவவும். பின்னர் 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து, அதிக ரசாயனங்கள் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் தலையை அலசவும். 

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான வெண்டைக்காய் துவையல் - முருங்கைப்பூ முட்டை பொரியல் செய்யலாம் வாங்க!
Protein hair mask

பயன்படுத்தும் முறை: 

வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும். முடியை ஈரப்படுத்திய பிறகு ஹேர் மாஸ்க் தடவுவது நல்லது. ஹேர் மாஸ்க் பயன்படுத்திய பின், தலைமுடியை ஆறவிடுங்கள். அதன் பின்னர் கழுவும்போது மைல்டு ஷாம்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹேர் மாஸ்க் பயன்படுத்திய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துவது முடியின் தன்மையை சிறப்பாக மாற்றும். 

இந்த ஹேர் மாஸ்க் தலையில் பயன்படுத்துவதற்கு முன் உங்களுக்கு முட்டை ஒவ்வாமை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முட்டை ஒவ்வாமை இருந்தால் அதற்கு பதிலாக அவகாடோ அல்லது பாதாம் பால் பயன்படுத்தலாம். ஹேர் மாஸ்கை உடனடியாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. இதை ஃப்ரிட்ஜில் சேமித்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமான புரோட்டீன் ஹேர் மாஸ்க் நீங்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்த முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com