தேமல் விரைவில் குணமாக உதவும் வீட்டு வைத்திய முறைகள்!

Home Remedies to Get Rid From Themal.
Home Remedies to Get Rid From Themal.
Published on

தேமல் என்பது சருமத்தில் வெள்ளை திட்டுகளைப் போல ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். சூரிய ஒளி, அலர்ஜி, தொற்று மற்றும் இன்னும் பல காரணங்கள் தேமலை ஏற்படுத்தும். தேமல் சிலருக்கு அரிப்புடன் கூடியதாக இருக்கும். இது தோற்றத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். விலை உயர்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு மாற்றாக, பல வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தியே தேமலை நாம் குணப்படுத்தலாம். 

தேமல் விரைவில் குணமாக உதவும் 7 வீட்டு வைத்திய முறைகள்: 

  1. ஆலம் பழம் தோலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. தேமலின் மீது ஆழம் பழச்சாறு தடவுவதால் அது விரைவில் குணமாகும். 

  2. தேன், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமின்றி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. தேனை தேமல் மீது தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். 

  3. ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்கி அரிப்பைத் தடுக்கும். எனவே, ஓட்ஸ் பேஸ்ட் போல அரைத்து அதை தேமல் மீது தடவி வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

  4. வெள்ளரிக்காய், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி தேமல் மீது தேய்ப்பது நல்லது. 

  5. கற்றாழை சருமத்திற்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதன் புண்களை ஆற்றும் பண்புகள், தேமலை விரைவில் குணமடையச் செய்யும். 

  6. பச்சை தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சரும செல்களை புதுப்பிக்க உதவுவதால், பச்சை தக்காளி சாற்றை தேமல் மீது தடவலாம். 

  7. குங்குமப்பூ சரும செல்களை சரி செய்யக்கூடியது. குங்குமப் பூ தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து தேமல் மீது தடவினாலும் விரைவில் குணமாகும். 

இதையும் படியுங்கள்:
வறட்சியான கண்களுக்கு வரப்பிரசாதமாகும் வீட்டு வைத்தியக் குறிப்புகள்!
Home Remedies to Get Rid From Themal.

மேற்கண்ட வீட்டு வைத்திய முறைகள் தேமலை குணப்படுத்த உதவும் என்றாலும், தேமல் நீண்ட நாட்கள் குணமடையாவிட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், தேமல் ஏற்படாமல் தடுக்க சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்த்துவிடுங்கள். எப்போதும் உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவற்றை நீங்கள் முறையாக கடைப்பிடித்தாலே, தேமலை விரைவில் குணப்படுத்த முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com