ஒரே வாரத்தில் முகப்பருக்களை நீக்கும் பாட்டி வைத்தியம்! அடேங்கப்பா? 

Acne
Home Remedies to Get Rid of Acne in One Week

முகப்பரு என்பது இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு தொந்தரவு தரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். இவை மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், எண்ணெய் நிறைந்த சருமம் மற்றும் சில மோசமான சரும பராமரிப்பு தயாரிப்புகளால் ஏற்படலாம். முகப்பருக்களை நீக்குவதற்கு பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கையான வழியில் தீர்வுகளைத் தேடுவது பாதுகாப்பானது. இங்குதான் நமக்கு பாட்டி வைத்தியம் உதவுகிறது. 

பல நூற்றாண்டுகளாக முகப்பருக்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகளை சமாளிக்க இயற்கை பொருட்களை பயன்படுத்தும் பாரம்பரிய வைத்திய முறைகள் உள்ளன. இந்த வைத்திய முறைகள் பெரும்பாலும் பாதுகாப்பானவை, மலிவானவை மற்றும் பக்க விளைவுகள் இல்லாதவை. இந்தப் பதிவில் ஒரே வாரத்தில் முகப்பருக்களை நீக்க உதவும் சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.‌

தேன்: தேன், இயற்கையான ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருக்களைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் தேனை முகப்பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே மசாஜ் செய்து பின்னர் கழிவினால், முகப்பருக்கள் விரைவில் குணமாகும். 

கற்றாழை: கற்றாழை ஜெல் சருமத்தை சரி செய்யவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் முகப்பருக்களை குறைக்கவும் உதவுகிறது. எனவே ஒரு கற்றாழை இலையில் இருந்து அதன் ஜெல்லை பிரித்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால், கொஞ்சம் கொஞ்சமாக முகப்பரு சரியாகும். 

மஞ்சள் தூள்: மஞ்சள் தூள் இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இதை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் விரைவில் குணமடையும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை பால் அல்லது தயிரில் கலந்து பேஸ்ட் போல தயாரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் முகப்பருவின் தாக்கம் குறையும். 

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு இயற்கையாகவே எண்ணெய் சுரப்பிகளை சுருக்கி முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து, பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், எப்படிப்பட்ட முகப்பருவாக இருந்தாலும் விரைவில் குணமடையும். 

இதையும் படியுங்கள்:
தினமும் வேப்பிலை சாப்பிட்டால் உங்களை இந்த நோய்கள் அண்டாது!
Acne

வேப்பிலை: வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. இதன் இயற்கையான ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் முகப்பருக்களின் தீவிரத்தன்மையை குறைக்க உதவுகிறது. வேப்பிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவி வந்தால், முகப்பரு பிரச்சனையிலிருந்து சீக்கிரம் விடுபடலாம். 

இந்த பாட்டி வைத்திய முறைகளை பின்பற்றி, முகப்பரு பிரச்சனையிலிருந்து நீங்கள் சீக்கிரமாக வெளிவர முடியும். எனவே பொறுமையாக இந்த வைத்திய முறைகளை முயற்சி செய்யவும். முகப்பருக்கள் சிகிச்சை செய்த உடனேயே மறைந்துவிடாது என்பதால், அவை குணமடைய சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com