

உங்கள் முகம் பொலிவாகவும், சிவப்பு நிறமாகவும், அழகாகவும், பிரகாசமாகவும் ஜொலிக்க ஒரு சில ஃபேஸ் பேக்குகளை (Face Pack) போட்டால் போதும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் முகத்தில் சுருக்கங்களை நீக்கி, முகப்பரு, தழும்புகளைப் போக்கும். இந்த இயற்கையான பொருட்களை கொண்டு ஃபேஸ் பேக்குகள் எப்படி போடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பப்பாளி கூழ்: ஒரு கிண்ணத்தில் சிறிது பப்பாளி கூழ், அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
எலுமிச்சை சாறு: ஒரு பவுலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சிடும்.
வெள்ளரித் துருவல்: ஒரு பவுலில் துருவிய வெள்ளரிக்காய் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பரு, கருமை நிறம் நீங்கி பொலிவு பெறும்.
தக்காளி கூழ்: ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி கூழுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.
கற்றாழை ஜெல்: ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து அதில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை ஊற்றி கலந்து கொண்டு அதை முகம், கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரால் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
இதில் ஏதாவது ஒன்றை அடிக்கடி செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.