பளபளப்பான முகத்திற்கு...!

பேஸ்பேக்
பேஸ்பேக்
Published on

தேவையானவை:

  • முல்தானி மட்டி - 2 ஸ்பூன்

  • லெமன் தோல் பவுடர்- 1/2 ஸ்பூன்

  • ஆரஞ்சு தோல் பவுடர் - 1/2 ஸ்பூன்

cleansing: ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும். பின் மீதான சூட்டில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை தொடைக்க வேண்டும். அப்படி செய்யும் போது முகத்துளைகளிலுள்ள (open pours) அழுக்குகள் நீங்கும்.

அதன்பிறகு முல்தானி மட்டி 2 ஸ்பூன் எடுத்து ஒரு கிணத்தில் போட்டு கொள்ளவும். லெமன், ஆரஞ்சு பழத்தின் தோளை தனித்தனியாக வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி 1/2 ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அத்துடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும். பின் சுடுதண்ணீர் தேவையான அளவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பேஸ்பேக்
பேஸ்பேக்

அதன் பின் கலந்து வைத்துள்ள கலவையை 1/2 மணி நேரம் முகத்தில் பேஸ்பேக் ஆக போட்டு கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் முகத்தை நான்காக கழுவி கொள்ளவும். பின் ஒரு துணி வைத்து அழுத்தம் கொடுக்காமல் முகத்தை ஒத்தி எடுக்கவும். அதனை ஒருநாளைக்கு 2 வேளை செய்து வந்தால் வெயிலினால் முகத்தில் ஏற்படும் கருமை மங்கு வெண்புள்ளிகள் மற்றும் கரும் புள்ளிகள் நீங்கும். அதன்பிறகு முகம் புத்துணர்ச்சியுடன் பளபளப்பாக பொலிவுடன் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com