என்றும் இளமை தரும் வாடாமல்லி: ரசாயனம் இல்லாத 4 எளிய அழகு ரகசியங்கள்!

கடைகளில் விற்கும் டோனர்களுக்குப் குட்பை சொல்லுங்கள்; வீட்டிலேயே இயற்கையான ஸ்கின் கேர்!
இயற்கை பராமரிப்பு|preparing vaadamali toner
இயற்கை பராமரிப்புAI image
Updated on

வாடாமல்லி (Gomphrena globosa / Bachelor's Button) என்பது அதன் பெயர் போல எப்பொழுதும் வாடாத, நிறம் மங்காத ஒரு அற்புதமான மலர். ஆன்மீகத்திற்கும், வீட்டு அலங்காரத்திற்கும் நாம் பயன்படுத்தும் இந்த ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற மலர்களில் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Anti-oxidants) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மிக அதிகமாக நிறைந்துள்ளன.

கலவை மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றவாறு, வாடாமல்லி மலரைக்கொண்டு செய்யக்கூடிய சில எளிய மற்றும் அருமையான அழகு குறிப்புகள் இதோ:

1. சுருக்கங்கள் இல்லாத சருமத்திற்கு வாடாமல்லி இயற்கை பராமரிப்பு

வாடாமல்லி இதழ்களில் உள்ள இயற்கையான வேதிப் பொருட்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, தோலை இறுக்கமடையச் செய்யும் (Skin Tightening) ஆற்றல் கொண்டவை.

தேவையான பொருட்கள்: வாடாமல்லி மலரின் இதழ்கள் - 1 கைப்பிடி, காய்ச்சாத பச்சைப் பால் - 2 மேஜைக்கரண்டி, அரிசி மாவு - 1 தேக்கரண்டி.

செய்முறை:

வாடாமல்லி இதழ்களைப் பச்சைப் பால் சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் மையாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி மாவைக்கலந்து பேக் போலத் தயார் செய்யவும்.

இவற்றை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் குளிர்ந்த நீரால் மெதுவாக மசாஜ் செய்து கழுவவும். இது சருமத்தில் கொலாஜன் (Collagen) உற்பத்தியைத் தூண்டி, முகம் எப்போதும் இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவும்.

2. முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க (Acne & Dark Spots Face Pack):

எண்ணெய்ப் பசை மற்றும் கலவை சருமத்தினருக்கு முகப்பருக்களும், அதனால் ஏற்படும் தழும்புகளும் ஒரு பெரிய சவாலாக இருக்கும். அதற்கு இந்த பேக் மிகச்சிறந்தது.

தேவையான பொருட்கள்: வாடாமல்லி இதழ்களின் விழுது - 1 மேஜைக்கரண்டி, கற்றாழை ஜெல் (Aloe Vera) - 1 மேஜைக்கரண்டி, எலுமிச்சைச்சாறு - 3 துளிகள் தேவையானது. இப்பொழுது அரைத்த வாடாமல்லி விழுதுடன் புதிய கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் முகம் முழுவதும் (குறிப்பாக எண்ணெய் பசை அதிகம் உள்ள டி-ஜோன் பகுதிகளில்) தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாடாமல்லி மற்றும் கற்றாழையின் கூட்டுச்சேர்க்கை முகப்பருவை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, கரும்புள்ளிகளை விரைவாக மறையச் செய்யும்.

இயற்கை பராமரிப்பு|vaadamali garden
இயற்கை பராமரிப்புAI image

3. எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் வாடாமல்லி டோனர் இயற்கை பராமரிப்பு

கடைகளில் விற்கும் ரசாயன டோனர்களுக்குப் பதிலாக, வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த டோனர் முகத்துளைகளைச் சுருக்கி, அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்: வாடாமல்லி மலர்கள் - 5 அல்லது 6, தண்ணீர் - 1 கப், ரோஸ் வாட்டர் (பன்னீர்) - 2 மேஜைக்கரண்டி. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, வாடாமல்லி இதழ்களைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். தண்ணீரின் நிறம் ஊதா அல்லது இளஞ்சிவப்பாக மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.

இந்த நீரை வடிகட்டி, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தினமும் இரவில் முகத்தைக் கழுவிய பின், இந்த டோனரை முகம் முழுவதும் ஸ்ப்ரே செய்து வரலாம். இது வெயிலினால் ஏற்படும் கருமையை (Sun Tan) நீக்கி, முகத்திற்கு ஒரு இயற்கையான இளஞ்சிவப்புப் பொலிவைத் (Pinkish Glow) தரும்.

4. கூந்தல் வேர்களை வலுவாக்கும் வாடாமல்லி இயற்கை பராமரிப்பு

முகம் மட்டுமல்லாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் வாடாமல்லி உதவுகிறது. அதற்கு வாடாமல்லி பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக்கொண்டு தலைமுடியை அலசி வந்தால் (Hair Rinse), கூந்தலின் வேர்க்கால்கள் பலமடைவதோடு, இளநரை வராமலும் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தினமும் அழகைக் கெடுக்கும் எண்ணெய் பசையா? வெற்றிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!
இயற்கை பராமரிப்பு|preparing vaadamali toner

சிறு குறிப்பு: வாடாமல்லி பூக்களை நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொண்டால் வருடம் முழுவதுமே நாம் ஃபேஸ் பேக்குகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாடாமல்லி மலர்களைக் கொண்டு இந்த இயற்கை பராமரிப்பை உங்கள் வார இறுதி நாட்களில் சருமப் பராமரிப்பில் முயற்சித்து பாருங்கள். நல்ல குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையலாம். மேலும் தொட்டி செடிகளாக இவற்றை வளர்த்து அனுதினமும் அழகை மேம்படுத்திக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com