லிப்ஸ்டிக் போடும்போது அழகாக போடுவது எப்படி?

lipstick
lipstick

லிப்ஸ்டிக்கை எப்படி பயன்படுத்துவது:

மெல்லிய உதடு, தடிமனான உதடு, சொப்பு உதடு என உதடுகளின் அமைப்பு நிறம் ஆகியவற்றை பொறுத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்கலாம்.

  • முகத்திற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூச வேண்டும். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.

  • தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போட வேண்டும். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாக தடவினால் போதும்.

  • மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க்  நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூச வேண்டும். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போட வேண்டும். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடலாம்.

  • மாநிறம் ஆன பெண்கள் லைட் ஆரஞ்சு கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, வெள்ளை நிற பெண்கள் லைட் ரோஸ் பிங்க் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம் உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது.

  • காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும் மாலையில் பளிச் நிறத்திலும் போடவேண்டும். ஆடைக்கு ஏற்ற நிறத்தை தேர்ந்தெடுத்து போடலாம்.

  • டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும்.

  • லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும் .

  • வீட்டில் இருக்கும் போது லிப்ஸ்டிக் வேண்டாம் .

  • அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகி விடும்.

lips
lips

உதடுகளை எவ்வாறு பராமரிப்பது:

  • உங்கள் உதடுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முதல் விஷயம் உங்கள் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருமையை போக்க முடியும். எனவே முதலில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை லிப்பாம் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பிளவுகள் இல்லாமல் இருக்கும்.

  • உங்கள் உதடுகளை எப்பொழுதும் நீரேற்றம் ஆக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டால் முதலில் உங்கள் உதடுகள் தான் வறண்டு போய் காணப்படும். எனவே ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் வரை குடித்து வாருங்கள்.

  • கெமிக்கல் சார்ந்த லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இயற்கையான லிப்ஸ்டிக்கைதேர்ந்தெடுங்கள். ஏனெனில் கெமிக்கல் நிறைந்த லிப்ஸ்டிக் உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கலாம். சீக்கிரமே கருப்பாக்கி விடும்.

இதையும் படியுங்கள்:
Keratin Treatment: தலைமுடிக்கு கெரட்டின் சிகிச்சை செய்வது நல்லதா?
lipstick
  • உதடுகளை ஸ்க்ரப் செய்வது மிகவும் அவசியம் இது உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இது உதடுகளுக்கு ஊட்டச்சத்துக்களை அழிப்பதோடு உதடுகள் மென்மையாக வைக்க உதவுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும்.

  • தேனை உதட்டில் வாரத்திற்கு இரண்டு முறை தடவ வேண்டும் இது உதடுகளில் உள்ள விரிசலைப் போக்கி உதடுகளை ஈரப்பதமாக்க உதவுகிறது. தேனில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உதடுகளில் உள்ள வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. அரை டீஸ்பூன் தேனை எடுத்து உங்கள் விரல்களை பயன்படுத்தி உதடுகளில் தடவ வேண்டும் கால் மணி நேரம் கழித்து கழுவினால் உதடு பளபளப்பாகும்.

  • ரோஜா இதழ்கள் போன்ற உதடுகளைப் பெற ரோஜா இதழ்களை பயன்படுத்த வேண்டும் சில ரோஜா இதழ்களை எடுத்து நசுக்கி வெண்ணெயில் சேர்த்து படுக்கைக்கு போவதற்கு முன் உதட்டில் தடவிக்கொள்ள வேண்டும் இது உங்கள் உதடுகளை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.

  • லிப்ஸ்டிக் பூசியபின் அதன் மேல் ஐஸ் கட்டி வைத்து லேசாய் தேய்த்தால் நாள் முழுவதும் லிப்ஸ்டிக் அழியாது.

  • சுத்தமான வெண்ணையை சிறிதளவு எடுத்து தினமும் உதடுகளில் தடவினால் உதடுகள் மென்மையாகும்.

  • வெயிலினால் உதடுகள் கறுப்பாக மாறலாம். இதைத் தடுக்க வாசலின் தடவிக் கொள்ள வேண்டும்.

  • ரோஜா பூ ஒன்று எடுத்து பால் விட்டு நன்றாக விழுது பதத்திற்கு அரைத்து எடுத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு மறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com