உங்க முகத்துக்கு ஏத்த Face Wash தேர்வு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Face Washing Girl
How to Choose the Right Face Wash for Your Face

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பராமரிக்க சரியான ஃபேஸ்வாஷ் தேர்ந்தெடுப்பது அவசியம். சந்தையில் பல்வேறு விதமான ஃபேஸ் வாஷ் கிடைத்தாலும் உங்கள் தோல்வகைக்கு ஏற்ற சரியான ஒன்றைக் கண்டறிவது முக்கியமானதாகும். இந்தப் பதிவில் உங்களது சருமத்திற்கு ஏற்ப எப்படி சரியான ஃபேஸ்வாஷைத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

  • ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் சரும வகையைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவும். பொதுவான சரும வகைகள் என்று பார்க்கும்போது எண்ணெய், உலர்ந்த, கலவையான மற்றும் சென்சிட்டிவ் உணர்திறன் கொண்டது எனப் பிரிக்கலாம். உங்கள் சரும வகையைப் புரிந்துகொள்வதன் மூலமாக அதற்கு ஏற்றவாறான ஃபேஸ்வாஷைத் தேர்ந்தெடுக்கலாம்.  

  • அடுத்ததாக உங்கள் சருமத்தில் உள்ள முகப்பரு, எரிச்சல், கரும்புள்ளிகள், கோடுகள், வயதான தோற்றம் போன்றவற்றை கவனியுங்கள். இத்தகைய பிரச்சனைகளை சரி செய்யும் ஃபேஸ்வாஷைத் தேர்ந்தெடுங்கள். 

  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபேஸ் வாஷில் உள்ள மூலப்பொருட்கள் என்னென்ன என்பதை முழுமையாக ஆராயவும். இதில் உங்கள் சருமத்திற்கு ஒத்துவராத ஏதேனும் பொருட்கள் உள்ளதா எனப் பாருங்கள். கடுமையான ரசாயனங்கள் வாசனை திரவியங்கள் மற்றும் ஆல்கஹால் இருப்பனவற்றை தவிர்க்கவும். ஏனெனில் அவை சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி எரிச்சலை ஏற்படுத்தும். 

  • உங்களுக்கு வறண்ட அல்லது விரைவில் நீரிழப்பை சந்திக்கும் சருமம் இருந்தால், ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் அல்லது செராமைடுகள் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்கள் கொண்ட பேஸ்வாஷ் தேர்ந்தெடுக்கவும். 

  • உங்களுக்கு சென்சிடிவ் சருமமாக இருந்தால், அதிக ரசாயனங்கள் இல்லாத லேசான ஃபேஸ்வாஷ் வாங்குங்கள். இயற்கையான மூலப் பொருட்கள் கொண்ட ப்ராடக்டுகளைத் தேடுங்கள். அவை சருமத்திற்கு எவ்விதமான தொந்தரங்களையும் தராது. 

  • உங்கள் வாழ்க்கைமுறை மற்றும் சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, அடிக்கடி சருமம் மாசுபடும் பிரச்சனையை சந்தித்தால், ஆழமாக சுத்திகரிக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷ் வாங்குங்கள். 

இதையும் படியுங்கள்:
Beard Growth Tips: இது தெரிஞ்சா தாடி வளர்ப்பது ரொம்ப ஈசி! 
Face Washing Girl
  • நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சருமப் பராமரிப்பு நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, உங்களுக்கான சரியான பேஸ்வாஷைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் நீங்கள் எந்த ப்ராடக்ட்டை வாங்குவதற்கு முன்பும், இணையத்தில் அதன் ஸ்டார் ரேட்டிங் மற்றும் ரிவ்யூகளை நன்கு படிக்கவும். இது உங்களுக்குத் தேவையான தகவலை வழங்கும். 

நீங்கள் இப்போதுதான் முதல் முறை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் ‘பேட்ச் டெஸ்ட்’ செய்வது நல்லது. அதாவது, உங்களது மணிக்கட்டு பகுதி அல்லது காதுக்குப் பின்னால் சிறிதளவு ஃபேஸ்வாஷைப் பயன்படுத்தி அது ஏதேனும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறதா? என கவனிக்கவும். 24 மணி நேரத்திற்குப் பிறகு உங்களுக்கு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை என்றால் அந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com