முழுமையான, ஸ்மார்ட் அவுட் பிட் என்பது வெறும் உடை, அணிகலன்கள், ஹேர் ஸ்டைல்ஸில் மட்டும் அடங்காது. நாம் அணியும் காலணியும் சேர்த்தால்தான் முழுமையடையும்.
“காலுக்கு அணியும் ஷுவில் என்ன உள்ளது? அதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்?” என்று அலட்சியமாக இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. நமது நடையின் மூலம் தன்னம்பிக்கையை வெளிபடுத்த
விதவிதமான ஷுக்களை அணிவது அவசியம். எந்த ஆடைக்கு எந்த வகையான காலணி அணிவது என்று பார்ப்போமா?
இது கட் ஷு போன்று விரல்கள் அனைத்தையும் மறைத்திருக்கும். பொதுவாக தொடை வரை அணியும் ஷார்ட் ஸ்கர்ட் உடையுடன் இதை அணிந்தால் அழகாக இருக்கும். இந்த ஸ்டைலை பிரஞ்சு ஸ்டைல் என்றும் கூறுவார்கள். இது இப்போது, நம் நாட்டிலும் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.
இது உடம்போடு ஒட்டி, முட்டி பகுதிக்கு கீழ் வரை இருக்கும் ஆடைகளுக்கு நன்றாக பொருந்தும். Open toe kitten heel என்பது நாம் ரஃபாக பயன்படுத்தும் சாதாரண மாடல் போன்றுதான் இருக்கும். முதல் இரு கால் விரல்களுக்கும் இடையில் மெலிதான பிடிமானத்துடன், தரையோடு நன்கு ஒட்டி, பின் பக்கம் மட்டும் ஹீலுடன் இருக்கும்.
இந்த வகையான ஹீல் தரையோடு ஒட்டி இல்லாமல் உயரமாக இருக்கும். மேலும், இதனுடன் இணைந்த வார் சிறிது மேல் சென்று இணைவதுபோல் இருக்கும். இந்த வகையான ஹீலை முழு நீள ஸ்கர்ட் மாடலுக்கு பயன்படுத்துவது ஒரு கம்பிரமான உணர்வை கொடுக்கும்.
இந்த வகையான ஹீல் உடம்போடு ஒட்டி இருக்கும் ஆடைகளுக்கு மிக ஏற்றவையாக இருக்கும். இந்த ஹை ஹீலில் மெலிதான வார் கொண்டு ஐந்து விரல்களையும் ஒன்றாக சேர்த்து, பின் கால் மடங்கும் இடத்தில் அந்த வார் இணைந்திருக்கும். மேலும், இது காலை நீளமாகவும், உயரமாகவும், மிக அழகாகவும் எடுத்துக்காட்டும்.
ஜீன்ஸ் மற்றும் தொடைவரை இருக்கும் மேலாடை அணியும்போது இந்த வகையான காலணிகள் பயன்படுத்தினால், ஒரு ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். மேலும், ஸ்கின்னி ஜீன்ஸ், லெகின்ஸ், ஜெகின்ஸ் ஆகிய ஆடைகளை உடுத்தும்போதும் இதுபோன்ற காலணிகள் பயன்படுத்துவது பேஷன்.
இதை டி ஷர்ட், ஹுடி போன்ற ஆடைகளுடன் அணிந்தால் மாஸாண லூக்கைத் தரும். மேலும் Party, Friends out, Family out, Weekend, trips போன்ற அனைத்திற்கும் ஏற்றவையாக இருக்கும்.
வெய்யில் காலங்களில் உடுத்திக்கொள்ளும் சம்மர் ஆடைகள் மற்றும் குட்டையான பேபி டால் ஆடைகளுடன் இந்த Loafer மாடல் காலணி அணிந்தால் எளிதான மற்றும் அழகான லூக்கை கொடுக்கும்.
ஷு ஷாப்பிங் செய்ய தயாரா நண்பாஸ்?