இயற்கைப் பொருட்கள் வைத்து டைமண்ட் ஃபேஷியல் செய்வது எப்படி?

Diamond Facial
Diamond Facial
Published on

அழகை பராமரிக்க பார்லர் செல்வதற்கு அதிக நேரம் இல்லையா? அப்போது இந்த டைமண்ட் ஃபேஷியலை ட்ரை பண்ணி பாருங்களேன்.

அதிக பேர் காலை வேலைக்கு சென்று இரவு வீட்டிற்கு திரும்பும் பெண்களாகவே உள்ளனர். வார இறுதியிலும் குடும்பத்தோடு நேரம் செலவிடவே நேரம் இல்லை. இதில் எங்கு சரும அழகைப் பராமரிக்க என்ற கவலை உள்ளதா?

அப்போது இயற்கைப் பொருட்களை வைத்து குறைந்த நேரங்களிலேயே இதனை முயற்சி செய்து பார்க்கலாமல்லவா?

மேலும் டைமண்ட் ஃபேஷியல் போன்ற பெரிய ஃபேஷியல்கள் செய்ய நேரமில்லை என்று எண்ணுபவர்களும், வீண் செலவு என்று சொல்பவர்களும் இந்த டைமண்ட் ஃபேஷியலை வீட்டிலேயே செய்யலாம்.

இந்த டைமண்ட் ஃபேஷியலுக்கு மிகவும் முக்கியமான ஒரு இயற்கை பொருள் தயிர். இந்த தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளதால், இது முகச்சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்ட்ரைஸராக இருந்து வருகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கீறல்களைத் தடுக்க இது நல்லது. மேலும் சருமத்தை வெண்மையாக்குவதற்கும் இது உதவுகிறது. இந்த ஃபேஷியலுக்கு சிறிதளவு புளிப்பான தயிரை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஃபேஷியல் செய்வதற்கு முன்னர் முகத்தை சுத்தம் செய்ய இந்த தயிர் ஸ்கர்ப் மிகவும் அவசியம். தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இதை சிறிது நேரம் செய்து 5 நிமிடம் கழித்து கழுவவும். அடுத்து ஸ்கரப்பிங் பேக் போட வேண்டும்.

இதற்கும் தயிர்தான் முக்கியம். தயிரில் சிறிது சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து முகத்தில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க இது மிகவும் முக்கியம். மூக்கின் ஓரங்களிலெல்லாம் நன்றாகத் தேய்க்க வேண்டும். பின்னர் கழுவினால், முகம் மென்மையாக மாறும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு தடையாகும் அற்ப சந்தோஷங்களும் வசதிகளும்!
Diamond Facial

அடுத்ததாக அறைத்த தக்காளியை தயிரில் கலந்து மசாஜ் செய்யவும். இதை 10-15 நிமிடங்கள் செய்யவும். சருமத்தை பொலிவாக்க இது மிகவும் நல்லது. சருமத்திற்கு நிறத்தையும் பொலிவையும் தரு. 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

இறுதியாக வைட்டமின் ஈ மாத்திரைகளை முகத்திற்கு தடவினால் முகம் பளபளப்பாக மாறும்.

இந்த டைமண்ட் ஃபேஷியலை செய்தால், முகம் இயற்கையாகவே ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com