கொரிய, சீனப் பெண்களின் டூயின் (டிக் டாக்) மேக்கப் வீட்டில் செய்து கொள்வது எப்படி?

மேக்கப் போடும் முறை...
மேக்கப் போடும் முறை...Image credit - pixabay.com

டிக் டாக் மேக்கப் என்று அழைக்கப்படும் டூயின் மேக்கப்,  சீனப் பதிப்பான டூயின் சமூக ஊடகத் தளத்தில் பிரபலமான ஒப்பனை வகையாகும். இது சீனப் பெண்களின் இயற்கையான அம்சங்களை மேம்படுத்தி கண்ணாடி போன்ற பளபளப்புடன் முகத்தை பிரகாசிக்க செய்கிறது.

இந்த டிக் டாக் மேக்கப் பயன்படுத்தி தங்களுடைய தோற்றத்தை, மென்மையான நுட்பமான, பளபளப்பான கண்ணாடிக் கன்னங்கள், வெல்வெட் உதடுகள்,வியத்தகு கண் ஒப்பனை  என்று மாற்றிக் கொள்கிறார்கள். இந்த ஒப்பனையில் கண்களை பெரிதாக்கலாம் தொங்கிய கண் இமைகளை மறைக்கலாம்.  ஐ ஷேடோக்கள் உதட்டுச்சாயம், முக வண்ணப் பூச்சிகள் போன்ற அழகு சாதனங்களை பயன்படுத்தி ஒருவரை மிகவும் அழகாக மாற்ற முடியும். உலகில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் டூயின் மேக்கப் பயன்படுத்தி தங்கள் தனித்துவமான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

டிக் டாக் அல்லது டூயின்  மேக்கப் போடும் முறை;

1. முதலில் சருமத்தை தயார் படுத்தவேண்டும். முகத்தில் உள்ள அழுக்குகளை ஒரு கிளன்சிங் கிரீம் கொண்டு நீக்க வேண்டும்.  முகத்தில் மாய்ஸ்ரைசரை தடவிக்கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள சிறு துளைகளை அடைக்கவும் மேக்கப் நீண்ட நேரம் நீடித்து இருக்கவும். ஒரு பிரைமரை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

முகத்தில் ஃபவுண்டேஷன் கிரீமை சமமாக தடவ வேண்டும். மேக்கப் பிரஷ் மூலம் அதை முகத்தின் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். கண்ணுக்கடியில் இருக்கும் கரு வளையங்களை மறைக்க கன்சிலரை உபயோகிக்க வேண்டும். அதேபோல முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை கன்சீலர் கொண்டு மறைக்க வேண்டும். 

சிலருக்கு கன்னங்கள் பெரிதாக இருக்கும். சிலருக்கு நெற்றி அல்லது தாடை பகுதி பெரிதாக இருக்கும். மேக்கப் போடும்போது அதை காண்டோரிங் செய்ய வேண்டும் அதாவது மேக்கப் மூலம் அதை சரி செய்ய வேண்டும். புருவங்கள், கன்னத்தில் எலும்புகள் குழிகளிலும் தாடைகளிலும், மூக்கின் நுனி போன்றவற்றில் காண்டோரின் தயாரிப்பை பயன்படுத்தி அதை சரி செய்ய வேண்டும். 

மேக்கப் போடும் முறை...
மேக்கப் போடும் முறை...Image credit - pixabay.com

கண்களுக்கு நல்ல வண்ணமயமான கட் க்ரீஸ், ஹாலோ ஐலைனர் அல்லது கிராஃபிக் ஐலைனர் போன்ற பல்வேறு ஐ  ஷேடோக்கள் பயன்படுத்த வேண்டும். முதலில் ஷேடோ ப்ரைமர்களை பயன்படுத்தி கண் இமைகளில் தடவவும்.  கண்கள் அழகாக மிளிர மஸ்காராவை உபயோகப்படுத்த வேண்டும். 

புருவத்தில் உள்ள பள்ளங்களை இட்டு நிரப்ப வேண்டும். புருவத்தில் முடி இல்லாத இடத்தில் பென்சில் கொண்டு வரைந்து கொள்ள வேண்டும். 

உதடுகளுக்கு  டூயின் ஒப்பனையில் பெரும்பாலும் உதடுகள் தடித்து இருப்பது போன்று வடிவமைக்கப் படுகிறது. முதலில் லிப் கிளாஸை உதடுகளில் தடவவும். பின் லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸிடிக்குகளை முதலில் அப்ளை செய்யவும்.

உதட்டை ஈரப்படுத்தி இளம் சிவப்பு உதட்டுச் சாயத்தை தடவ வேண்டும். மென்மையான தூரிகை கொண்டு அதைத் தடவினால் அது சீராக உதடு முழுக்க பரவும். மினுமினப்பான  லிப்ஸிடிக் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான 10 உபயோகமான டிப்ஸ்!
மேக்கப் போடும் முறை...

முகம் மேலும் பளபளக்க முகத்தில் ஒளிரும் முக கற்கள் அல்லது ஒளிரும் ரைன் ஸ்டோர்களை ஒட்டிக் கொள்ளவும். இது முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும். 

டூயின் மேக்கப் என்பது முழுக்க முழுக்க படைப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியது எனவே ஒருவர் தன் முகத்திற்கு ஏற்றார் போல விதவிதமான வண்ணங்களில் மேக்கப் செய்து கொள்ளலாம். மேலும் விதவிதமான உத்திகளையும் பயன்படுத்தி தன்னை அழகாக காட்டிக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com