கருவளையத்தை ஒரே வாரத்தில் சரி செய்யும் வழிமுறைகள்! 

dark circles
How to fix dark circles in one week!
Published on

கருவளையம் என்பது தூக்கமின்மை, நீண்ட நேரம் கணினி/ஸ்மார்ட் போன் திரையை பார்ப்பது, உடல்நிலை சீர்கேடு போன்ற காரணங்களால் ஏற்படலாம். இது முகத்தின் அழகை பாதிப்பதோடு மட்டுமின்றி, நம்மை சோர்வாகவும் வயதான தோற்றத்துடனும் காட்டும். ஆனால், இனி நீங்கள் அவற்றைப் பற்றி;கவலைப்பட வேண்டாம். சரியான பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றி ஒரே வாரத்தில் அதை நீங்கள் சரி செய்ய முடியும். இந்தப் பதிவில் கருவளையத்தை சரி செய்ய உதவும் பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 

கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்: 

தினசரி போதுமான அளவு தூங்கவில்லை என்றால் கண்களை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து கருவளையம் ஏற்படும். கணினி/மொபைல் போன்ற சாதனங்களை நீண்ட நேரம் பார்ப்பதால் கண் வறண்டு கருவளையத்திற்கு வழிவகுக்கும். 

வயது அதிகரிக்கும்போது தோல் அதன் இறுக்கத்தை இழந்து கண்களை சுற்றிலும் தோல் மெலிந்து கருவளையம் ஏற்படலாம். சிலருக்கு தூசி, மகரந்தம் போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டு கண்கள் சிவந்து கருவளையங்களை உண்டாக்கும். 

உப்பு, சர்க்கரை போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் கண்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி கருவளையம் ஏற்படும். ரத்த சோகை, நீரிழிவு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவையும் கருவளையம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். 

ஒரே வாரத்தில் கருவளையத்தை சரி செய்யும் வழிகள்: 

ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்குங்கள். நீங்கள் முறையாக தூங்கினாலே கருவளையம் சரியாகிவிடும். கணினி,ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களின் திரைகளை தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பார்க்காதீர்கள். கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க வெள்ளரிக்காய், பப்பாளி போன்றவற்றை கண்களில் வைக்கவும். 

பச்சை காய்கறிகள், பழங்கள், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், ரத்த ஓட்டம் அதிகரித்து கருவளையம் குறையும். காலை வேளையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதால் உடலுக்கு தேவையான விட்டமின் டி கிடைத்து கருவளையத்தை குறைக்கும். 

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் போனால் ஏற்படும் கண் எரிச்சலைப் போக்க 7 எளிய வழிமுறைகள்!
dark circles

கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்வதால் அதன் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆலிவ் ஆயில், ஆலோவேரா போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்களை பயன்படுத்துவதால் தோல் இளமையாகவும் பொலிவாகவும் மாறும். 

சில சமயங்களில் கருவளையம் அதிகமாக இருந்தால். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். லேசர் சிகிச்சை, ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சைகள் விரைவில் கருவளையத்தை குறைக்கும்.‌ 

கருவளையத்தை நீக்குவது என்பது ஒரே நாளில் நடக்கும் விஷயம் அல்ல. ஆனால், சரியான உணவு, தூக்கம் மற்றும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி ஒரே வாரத்தில் அதன் தாக்கத்தை கணிசமாகக் குறைக்க முடியும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் கருவளையத்தை முற்றிலுமாகி நீக்கி புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெறலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com