
பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்றுதான் கருவளையம். அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றது. இவ்வாறு கருவளையங்கள் அறுவதால் முகம் சற்று பொலிவிழந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. (How to get rid of dark circles?) இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்கலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாறை சமஅளவு எடுத்து கலந்து ஒரு நாளைக்கு இரண்டுமுறை கண் கீழே (கண்ணில் படாமல்) தடவி வந்தால் கருவளைங்கள் நாளடைவில் குறைந்துவிடும்.
தினமும் படுக்கும் முன்பு வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த கிரீம்களை தடவி வந்தால் கருவளையம் போய்விடும்.
சிறித புதினா இலை நைசாக அரைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இது ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக காணப்படுகிறது.
உருளைக்கிழங்கு அரைத்து அதில் இருந்து வரும் சாற்றினை காட்டன் துணியில் நனைத்து அதனை கண்களை சுற்றி தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நாளடைவில் போய்விடும்.
வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை துவைத்து கருவிழங்கின் மேல் வைத்து 10 நிமிடம் கழித்து கழுவலாம்.
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு சாதம் கலந்து தஞ்சை துவைத்து கண்களில் வைத்து 10 நிமிடம் கழித்து கழுவிவர கருவளையம் நீங்கும்.
கடலைமாவில் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் குழைத்து கருவளைங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
முல்தானி மட்டியை பன்னீரில் குழைத்து பூசி வந்தால் கருவளையம் மறையும்.
டீ டிகாஷனில் ஊறிய பஞ்சை கருவளையங்களில் பூசி வந்தாலும் கருவளையம் மறையும். வெள்ளரித்துண்டுகளை கண்கள் மேல் வைத்து மூடி 10 நிமிடம் கழித்து எடுத்துவிடவும். இது மாதிரி செய்து வந்தால் கருவளையம் மறையும்.
விட்டமின் ஈ அதிகம் நிறைந்த விளக்கெண்ணையை சருமத்தில் வறட்சியை போக்கக்கூடியது. விளக்கெண்ணையை கண்ணைச் சுற்றி போட்டு வந்தால் மறையும்.
வாழைப்பழம் சிறந்த ஃபேஸ் பேக் போன்று செயல்படும்.
வாழைப்பழத் தோலை கத்தரித்து வட்ட வடிவில் கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் இதில் உள்ள பொட்டாசியம் சருமத்துக்கு வேண்டிய வைட்டமின் சத்தை தருவதோடு கருவளையத்தையும் நீக்கும்.
இதில் உள்ள ஏதேனும் ஒன்றை செய்து வரலாம்.