வீட்டிலேயே கொலாஜன் க்ரீம் செய்வதற்கான வழிமுறைகள்!

Homemade Collagen
Homemade Collagen
Published on

சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது கொலாஜன். கடைகளில் இது அதிகம் விற்கப்படுகிறது. அதேபோல் வீட்டிலும் நாம் கொலாஜனை செய்யலாம்.

உடம்பில் இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறையும் போது, சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள், வறட்சி போன்றவை ஏற்படும். இயற்கையாகவே நமது உடலில் கொலாஜன் உற்பத்தி சரியாக இருந்தால் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் காணப்படும். இதற்கு நாம் சீராக உணவுகளை எடுத்து வந்தால் போதும்.

ஒருவேளை உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்தால், கொலாஜன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

கொலாஜன் க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:

1.  ஆமணக்கு எண்ணெய்: ஈரப்பதமூட்டும் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும்.

2.  சோள மாவு: க்ரீம் அமைப்பிற்கு உதவும்.

3.  பாதாம் எண்ணெய்: இதில் வைட்டமின் ஈ உள்ளதால், ஈரப்பதத்தை தக்க வைக்கிறது மற்றும் சரும சேதத்திலிருந்து பாதுகாக்குறது.

4.  தண்ணீர்: க்ரீம் கலவைக்கு

5.  காபி: ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இயற்கையாகவே இருக்கும்.

6.  கற்றாழை: குணப்படுத்தும் மற்றும் ஈரப்பதம் மூட்டும் தன்மைக் கொண்டது.

செய்முறை:

1.  10 மில்லிலிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். நீர் கொதித்த பின்னர் 2 முதல் 3 தேக்கரண்டி காபி பவுடர் சேர்க்கவும். நன்றாக கொதித்து தண்ணீருடன் கலக்கும் வரை விடவும்.

2.   இப்போது காட்டன் துணியால் நீரை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். நீரை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

3.  வடிகட்டிய காபி தண்ணீரை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் சோள மாவு கலந்து க்ரீம் வகையில் வரும்வரை கலக்கவும்.

4.  பின் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு கிண்ணத்தில் மாற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

5.  பின் அதனை வெளியில் எடுத்து அதனுடன் கற்றாழையில் உள்ள ஜெல்லை பிரித்து எடுத்து சேர்க்கவும். கையில் நன்றாக கலக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுருட்டை முடியை அழகாக பராமரிக்க 10 டிப்ஸ்!
Homemade Collagen

6.  இறுதியாக, ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை கலவையில் சேர்க்கவும்.

7.  இந்த கலவையை சுத்தமான ஒரு டப்பாவில் மாற்றி பயன்படுத்தி வரலாம்.

கடையில் வாங்கும் பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கும் என்று அஞ்சுபவர்கள் இதுபோல வீட்டில் செய்து பயன்படுத்தலாம்.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com