ஒருமுறை இந்த Korean coffee Face Mask பயன்படுத்திப் பாருங்களேன்! 

Korean coffee Face Mask
Korean coffee Face Mask
Published on

கடந்த சில ஆண்டுகளாகவே கொரியா அழகு சாதனப் பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக இவற்றில், பேஸ் மாஸ்க் முதல் சரும பராமரிப்பு பொருட்கள் வரை கொரிய அழகு சாதனப் பொருட்களின் பக்கம் உலகெங்கிலும் உள்ள மேக்கப் ஆர்வலர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதில் கொரியன் காபி ஃபேஸ் மாஸ்க் என்பது சரும பராமரிப்பு முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். இந்தப் பதிவில் இதை எப்படி தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம்.

Korean coffee Face Mask செய்யத் தேவையான பொருட்கள்: 

காபி பவுடர் - பொதுவாகவே காபி பவுடர் இறந்த சரும செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்க உதவுகிறது. இதில் முகத்திற்கு ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. 

தேன் - தேன் அதன் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு காரணமாக கொரியன் காபி பேஸ் மாக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுத்து மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. 

தயிர் அல்லது பால் - இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். 

களிமண் - Kaolin அல்லது Bentonite வகை களிமண் இதில் பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த உதவும். 

செய்முறை: 

முதலில் காபி பொடியை தண்ணீரில் கொட்டி நன்கு காய்ச்சவும். பின்னர் அதை ஆற வைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் தேன், தயிர் அல்லது பால் மற்றும் சிறிதளவு களிமண்ணை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் போல தயார் செய்தால், Korean coffee face mask தயார். 

இதை முகத்தில் தடவுவதற்கு முன் முகத்தை தண்ணீர் பயன்படுத்தி நன்கு கழுவிக் கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த ஃபேஸ் மாஸ்க்கை கண்களைத் தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும் சமமாகப் பரவும் படி தடவவும். அதன் பின்னர் 15 அல்லது 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
பாதங்களுக்கு மசாஜ் தெரபி; என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா உங்களுக்கு?
Korean coffee Face Mask

இறுதியில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி மெதுவாக முகத்திற்கு மசாஜ் செய்யவும். இதன் பிறகு ஈரப்பதத்தை தக்க வைக்க உங்களுக்குப் பிடித்த மாய்ஸ்ச்சரைசர் பூசிக்கொள்ளுங்கள். 

இந்த ஃபேஸ் மாஸ்க் உண்மையிலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடியவை என்பதால், நல்ல பிரகாசமான முகத்தை விரைவாக நீங்கள் பெற முடியும். ஏதேனும் நிகழ்வுக்கு செல்கிறீர்கள் என்றால், அப்போது இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தினால், முகம் பளபளவென்று பிரகாசிக்கும். இதை முயற்சித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com