இனி தைரியமா சிரிக்கலாம்! பற்களில் மஞ்சள் கறையா? No worries!

Yellow stains on teeth
Yellow stains on teeth
Published on

மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பல வழிகள் இருந்தாலும், முதலில் வெளிப்படுவது புன்னகைதான். நம்முடைய இந்த புன்னகை நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக உணர செய்யும். நாம் எவ்வளவு செலவு செய்து நம்மை அழகு படுத்தி கொண்டாலும் ஒரு சிறிய புன்னகை நம்மை அழகாக்குவதற்கு ஈடாகுமா?

ஆனால் சில சந்தர்பங்களில் நமக்கு சிரிக்க தோன்றினாலும் நாம் சிரிப்பது இல்லை. இதற்கு காரணம் நம்முடைய பற்கள். பற்களில் மஞ்சள் கறைகள் படிந்திருந்தால், மற்றவர்கள் முன் சிரிப்பதற்கு சங்கடமாக இருக்கும். நாம் இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறையை எவ்வாறு நீக்கலாம் என பார்க்கலாம்.

பற்களில் மஞ்சள் கறை ஏன் வருகிறது?

ஒருவரின் வயதுக்கேற்ப பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. பற்களின் எனாமல் தேய்ந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்து, அருந்தும் பானங்களில் இருந்து வெளிப்படும் அமிலங்கள், மரபணு, அடிக்கடி டீ, காபி குடிப்பது, புகைப்பிடித்தல், முறையாக பல் துலக்காமல் இருப்பது ஆகிய காரணங்களால் பற்களில் மஞ்சள் கறை படிகிறது.

இதை ட்ரை பண்ணுங்க:

தினசரி  குறைந்தது 2 முறை பல் துலக்க வேண்டும். காலை எழுந்ததும் பல் துலக்கும் நாம், இரவு உணவிற்கு பிறகு தூங்க செல்லும் முன் கட்டாயம் பல் துலக்க வேண்டும். அமில உணவுகள் மற்றும் பானங்கள் அருந்திய பிறகு சிறிது நேரம் கழித்து பற்களை துலக்க வேண்டும். 

ஆயில் புல்லிங் தொடர்ந்து செய்வதால் பற்களின் நிறம் மாறாமல் வெள்ளையாக இருக்கும். இந்த ஆயில் புல்லிங் பண்டைய ஆயுர்வேத சிகிச்சை முறை என்பதால் பற்களின் தன்மையை பாதுகாக்கிறது. ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை அல்லது வாழைப்பழத் தோல் கொண்டு பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் வெள்ளை நிறமாக மாறும் என கூறப்படுகிறது. ஏனெனில் சில சிட்ரஸ் பழங்களின் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் அல்லது டி-லிமோனீன் பற்களை வெண்மையாக்கும். ஆனால், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு அதன்பிறகு தொடரலாம்.

இதையும் படியுங்கள்:
முத்து போன்ற பற்கள் வேண்டுமா? இதை செய்து பாருங்கள்!
Yellow stains on teeth

சர்க்கரை அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் பற்களில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும். எனவே பேக் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகமாக உள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இதனால் பற்களில் மஞ்சள் நிறம் ஏற்படுவது தடுக்கப்படும்.

காலை பல் துலக்கும் போது சிறிதளவு பேக்கிங் சோடா அல்லது சமையல் உப்பை கொண்டு பற்களை தேய்த்து வரலாம். இதனால் பற்கள் வெள்ளை நிறமாக மாறும். ஒரு சிலருக்கு உப்பு கொண்டு பல் தேய்த்தால் பல் கூச்சம் ஏற்படலாம். அவர்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு தொடரவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com