

இளமையை முடிந்தவரை தக்கவைக்க அனைவரும் விரும்புவர். இதற்கு ஒரு தரப்பினர் எவ்வளவு வேணாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார்கள். கோடைக் காலம் தொடங்கி மழை, குளிர் என்று தனித்தனியாக இதற்கென்று பொருட்களை வீட்டில் அவர்களுக்கென்று அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால், செலவு செய்தால் மட்டும் போதுமா? அதைவிட்டால் வேறு வழி இல்லையா? எது ரொம்ப அவசியம்?
வாழ்நாள் முழுவதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் உடலையும், மனதையும் ஒருசேர காக்க வேண்டிய சில நல்ல பழக்க வழக்கங்களை பலர் மறந்துவிடுகிறார்கள். இதற்கு அழகுசாதன பொருட்கள்(cosmetic products) உடனடி தீர்வுகள் வழங்கினாலும், மறுபுறம் உங்கள் சராசரி வயதிற்கேற்ற தோற்றத்தை மறைக்கும் சக்தி ஒரு நிலையான இயற்கை பழக்கவழக்கங்களில் தான் மறைந்திருக்கிறது (consistent natural practices).
'நீண்ட ஆயுள்' நிபுணர்களின் (longevity experts) கருத்துப்படி சூரியக் கதிர் பாதுகாப்பு(sun protection), நீரேற்றம்(hydration), ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்(nutrient-rich diets), இவைதான் உடல் தோற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன. எனவே, தினசரி சன்ஸ்கிரீன்(sunscreen) பயன்பாடு (நாம் வீட்டிற்குள் இருந்தாலும் பயன்படுத்த வேண்டுமாம்) UV வெளிப்பாட்டால் ஏற்படும் முன்கூட்டிய வயதான தோற்றத்தைத்(premature aging) தடுக்கிறது.
அதோடு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும். உணவு விஷயங்களில் பெர்ரி(berries), இலை கீரைகள், நட்ஸ்(Nuts) போன்ற Antioxidants நிறைந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள செல் சேதத்தைத்(cellular damage) தடுக்கிறது.
சரி உடலைப் பார்த்துக்கொண்டால் போதுமா? உடல்ரீதியான நம் தயார் நிலை மட்டும் போதாது. வயதாகும்போது மன வலிமையும்(Mental resilience) தேவையான ஆதரவு தருகிறது. ஒருவர் வாழ்க்கையில் தொடரும் நாள்பட்ட மன அழுத்தம்(chronic stress) உடலில் கார்டிசோல் அளவை(cortisol levels) அதிகரிக்கிறது. இது சருமத்திற்குத் தேவையான கொலாஜன்(collagen protein) அளவைத் தடுக்கிறது, தூக்க தரத்தையும் பாதிக்கிறது. காலப்போக்கில் வயதான தோற்றத்தையும் துரிதப்படுத்துகிறது.
இதைப்போக்க மன நிறைவு தியானம் (yoga), நன்றியுணர்வு (gratitude journaling), ஆழ்ந்த சுவாசம் போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். காலப்போக்கில் இது நம் தோரணை, வெளிப்பாடு(expression), ஒட்டுமொத்த ஆற்றலில் கலந்து வெளிப்புறமாக நம் தோற்றத்தில் பிரதிபலிக்கிறது.
எனவே, நம் இளமையைத் தக்க வைப்பதில் தூக்கத்தின் பங்கு பெருமளவில் உள்ளது. உடலில் உள்ள சில பிரச்னைகள் தரமான தூக்கத்தால்தான் உடலை தன்னைத்தானே சரிசெய்து கொள்ள அனுமதிக்கிறது. இது தேவையான ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை நம் வழக்கமான இயக்கத்துடன் இணைத்துக் கொள்ளலாம். நாம் செய்யும் உடற்பயிற்சிகளுடன், இயற்கையோடு நடப்பது (walking in nature) அல்லது யோகா போன்ற செயல்பாடுகளுடன் நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)