குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?

How to take care of hair in winter?
Hair care tips
Published on

ந்த ஆண்டுக்கான மழைக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுதே குளிரும் சேர்ந்து கொண்டது. இனி குளிர்காலம் வந்துவிட்டாலே போதும் நாம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதிலும் தலைமுடியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.  தலைமுடியை பராமரிப்பது என்பது பெரும் சவாலான விஷயம்தான். ஆனால் அதை சுலபமாக செய்து முடிக்கலாம். எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

குளிர்காலத்தில் தலைமுடிக்கு நன்றாக எண்ணெய் தேய்த்து தலைவாருவது நல்லது.

வெங்காயம், கற்றாழை ஜெல், கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, மருதாணி ஆகியற்றை விழுதாக அரைத்து சூடான தேங்காய் எண்ணெயில் மிதமான சூட்டில் காய்ச்சி பயன்படுத்தினால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும். முடியும் நீளமாக வளரும்.

தலைக்குக் குளிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பு தேங்காய் எண்ணெயை முடியில் தேய்த்து ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும். இதனால் பொடுகுத்தொல்லை நீங்கும்.

முடியின் வேர்ப்பகுதிகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க சிறிது வெட்டிவிடுவது நல்லது.

முடிக்கு வண்ணம் பூசுவது, அயனிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தலைக்கு அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் முடி வறண்டு உதிரத்தொடங்கும்.

வாரத்துக்கு இரண்டு முறை தலைக்குக் குளிப்பது நல்லது.
தலைக்குக் குளித்த பிறகு ரசாயன கண்டிஷனர் பயன்படுத்துவதற்குப் பதில் தேங்காய்ப்பாலை கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
புருவ அழகு பராமரிப்புக்கான 5 குறிப்புகள்!
How to take care of hair in winter?

வறண்ட தலைமுடிக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

தலைக்குக் குளித்த அடுத்தநாள் மருதாணி விழுதைத் தலையில் தேய்த்து வெறும் தண்ணீரில் அலசினால் முடி மிருதுவாக இருக்கும்.

ஈரமான தலைமுடியை நன்றாகக் காயவிட்ட பிறகே தலைவார வேண்டும். தடை முடியை வளர்க்க நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். அதனால் அதை பாதுகாப்பாக நாம் பராமரிக்க மேற்கண்ட யோசனைகளை பின்பற்றுங்கள் போதும்.

குளிர்காலத்தில் மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் தலைமுடிக்கு பாதுகாப்பு கொடுங்கள். முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இக்குறிப்புகள் பெரிதும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com