ஸ்டைலாக சுலபமாக புடவைக் கட்டுவது எப்படி?

How to tie a saree...
How to tie a saree...Image credit - pixabay.com

ணப்பெண்தான் அழகாக புடவையைக் கட்ட வேண்டுமென்பதில்லை. அன்றாடம் சேலை கட்டும் பெண்களும், பணிக்கு, பங்ஷன் என போகும்போது நேர்த்தியாக கட்ட அழகு கூடும். சில டிப்ஸ்களை பார்ப்போம்.

உள்பாவாடை கட்டும்போது வலது அல்லது இடது பக்கம் கட்டுவோம். முடிச்சு போடும்போது பாவாடை நாடாவில் சுருக்கம் ஏற்படுவது புடவை கட்டும்போதும் தெரியும். இதை தவிர்க்க முதுகு தண்டு வட பக்கம் சுருக்கம் வருமாறு கட்ட, புடவை கட்டும்போது அழகாக இருக்கும்.

முந்தானை ஃப்ளீட்ஸ் எடுக்கும்போது மார்பக பகுதியை கவர் செய்து பின் செய்ய வேண்டும். பிளீட் நிறைய வேண்டுமெனில், ப்ளீசட். எடுத்து அதை அயர்ன் பண்ணி, பின் ஜாக்கெட்டை  தோள். பக்க பின்புறம் பின் பண்ண அப்படியே இருக்கும்.

ஃப்ளீட்ஸ் எடுக்கும்போது இடுப்பு பகுதியை கவர் செய்து கட்ட உடல் தெரியாமல் நன்றாக இருக்கும். புடவை கொசுவம் வைத்து பின் பண்ணும்போது புடவை துணியில் குத்தாமல் பாவாடையில் குத்த வேண்டும். அப்போதுதான் நகராமல் இருக்கும்.

ஷேப்பர் வியர் போடும்போது செளகரியமாக இருக்குமா என செக் பண்ணிய பின் கட்ட வேண்டும். பழக்கமில்லாமல் கட்டும்போது அசெளகரியமாக இருக்கும்.

புடவை கட்டி முடித்த பிறகு மார்பக பகுதியில் பிளீட்ஸ் தளர்வாக இருப்பதாக தோன்றினால் தோள் பட்டையில் உள்ள முந்தானையை நன்றாக இழுத்து பின் குத்தலாம். புடவை நகராமல் இருக்கும்.

காட்டன் பாவாடைகள்தான் கம்போர்ட் ஆக இருக்கும். சாட்டின் துணி, ஷேப்பர் போன்றவற்றை தவிர்க்கலாம். இவற்றின் மேல் புடவை கட்டும்போது சரியாக நிற்காது.

இதையும் படியுங்கள்:
சூரிய ஒளி கடிகாரம் அமைந்த அபூர்வ திருக்கோயில் தெரியுமா?
How to tie a saree...

புடவையின் இடது பக்கம் லேயர் வைக்கும்போது அதனையும் உள்ளே நன்றாக இழுத்து பாவாடையுடன் சேர்த்து பின் பண்ண வேண்டும்.

டிரேப்பிங் ஸ்டைல்களை பிராக்டீஸ் பண்ணிக் கொண்டு கட்ட சூப்பராக இருக்கும். முந்தானையை ஃப்ரீயாக விடும்போது மடிப்பு எடுத்து கையில் வைத்துக்கொள்ள அழகாக இருக்கும்.

ஹெவி ஒர்க் புடவைகளுக்கு சிம்பிள் கான்ட்ராஸ்ட் ஜாக்கெட் போட அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com