ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!

ஃபேஷன் டேப்
ஃபேஷன் டேப்Image credit - escapeauthority.com

* ஃபேஷன் டேப் என்பது ஃபேஷன் உலகின் ஒரு இன்றியமையாத பொருளாகும். இது பல்வேறு விதமான ஆடை சார்ந்த சவால்களுக்கு தீர்வுகளை வழங்குகிறது. நாம் அணியக்கூடிய ஆடைகளைப் பாதுகாப்பது மற்றும் உடையின் நம்பிக்கையையும் முழுமையையும் உறுதி செய்வதில் ஃபேஷன் டேப் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* ஃபேஷன் டேப் வெவ்வேறு மாதிரியான வடிவங்களில் வருகிறது. மேலும் இவை தனிநபரின் ஆடைக்கான குறிப்பிட்ட தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

*  ஆடையோ அணிகலனோ விழும் அல்லது நழுவும்  என்ற அச்சமின்றி நீங்கள் விரும்பும் எதையும் அணிய அனுமதிக்கிறது இந்த ஃபேஷன் டேப்.

ஃபேஷன் டேப்
ஃபேஷன் டேப்

* உங்களுடைய அளவுக்கு சற்று பெரியதாக இருக்கும் சட்டைகளை சரிசெய்யவும்கூட நீங்கள்  இதனைப் பயன்படுத்தலாம்.

* இந்த ஃபேஷன் டேப் நம்முடைய சருமம் மற்றும் ஆடைகளுக்கு இருபக்கமாகவும் பொருத்திக்கொள்ளும் வடிவில் தான்    வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெக்லைன்களைப் பாதுகாத்தல்: ஃபேஷன் டேப் பெண்களுக்கான  ஆடைகளின் நெக்லைன்களை சரியான இடத்தில் வைத்திருக்கவும் அல்லது நெக்லைன்கள் நழுவுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

ஃபிக்சிங் ப்ரா ஸ்ட்ராப்ஸ்: பெண்களுக்கு நழுவுகின்ற ப்ரா பட்டைகளை தோளிலோ அல்லது ஆடையிலோ பொருத்திக்கொள்ள இதனை பயன்படுத்தலாம்.

* கிளோசிங் பட்டன் கேப்ஸ்: ஃபேஷன் டேப் சட்டைகள் அல்லது பிளவுசுகளில் உள்ள பட்டன்களுக்கு இடையே இருக்கும்  இடைவெளிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப சரி செய்யவோ அல்லது  அந்த இடைவெளியை நீக்கவோ உதவுகிறது.

* பொதுவாகவே நாம் கழுத்தில் அணியக்கூடிய அணிகலன்கள் நம்முடைய உடலின் அசைவுக்கு ஏற்றார் போல ஆடுவது சகஜம் தான். ஆனால் அவை ஆடாமல் தடுப்பதற்கு இந்த ஃபேஷன் டேப்பை பயன்படுத்தி நாம் அவற்றை ஒட்டவைக்கலாம். இதனால் அது ஆடாமல் ஒரே இடத்தில் நம்முடைய புடவையோடு அல்லது ஆடையோடு பொருந்திக்கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
எண்ணங்கள் மூலம் வாழ்வில் ஏற்றம் பெறுவது எப்படி?
ஃபேஷன் டேப்

* சரியாக பொருந்தாத ஷூவைப் பயன்படுத்துவது பெரும்பாலானோர் சிவது தான். ஷூவின் விளம்பில் இந்த டேப்பை பொருத்தி பிறகு பயன்படுத்தினால் ஷூ ஆடாமல் காலுக்கு சரியான அளவில் ஃபிட்டாக இருக்கும்.

* இரட்டை பக்க ஃபேஷன் டேப் ஒரு வலுவான பிடியை வழங்குகிறது. ஹைபோஅலர்கெனி மற்றும் மருத்துவத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதன் பிசின் சருமத்தில் மென்மையாகவும்  மற்றும் துணியில் இருந்து இழுக்காமலும் இருக்கும்.

* ஒட்டிய இடத்திலிருந்து பிய்த்து எடுக்கும்போது சுலபமாக உரிந்து வந்துவிடும். மேலும் ஒட்டியிருந்த பொருளுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com