வேட்டி
வேட்டி

வேட்டி - பற்றிய அற்புதத் தகவல்கள்!

மிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி என்றாலும் கூட, இன்று அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்திருக்கிறது. எனினும், தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாது, பிற தென் மாநிலங்களிலும், வங்கத்திலும் வேட்டி வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேட்டி கட்டுவது இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 1 முதல் 6ஆம் தேதி வரை வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரத்திற்கு இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஜனவரி  ஆறாம் தேதி வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டியை கட்டிக்கொண்டு அன்று அனைவரும் அலுவலகத்திலும், கல்லூரிகளிலும் வேட்டியின் பாரம்பரியத்தை பாதுகாக்கின்றனர். இந்த வேட்டி தினம் கொண்டாடுவது 2015 ஆம் ஆண்டு முதல்தான் துவங்கியது.

வேட்டிகள்....
வேட்டிகள்....

வேட்டியின் வெவ்வேறு பெயர்கள்

வுத்தா என சமஸ்கிருத மொழியிலும், தோத்தி என ஒரியாவிலும், தோத்தியு எனக் குஜராத்திலும், சூரியா என அசாமிய மொழியிலும், தூட்டி என வங்காள மொழியிலும், தோத்தி அல்லது கச்சே பான்ஞ்சே என கன்னட மொழியிலும், தோத்தர் அங்கோஸ்கர் ஆத்செஸ்ச்சே அல்லது புத்வே என கொங்கனி மொழியிலும் முந்த்து என மலையாளத்திலும், தோத்தி அல்லது பன்ச்சா தெலுங்கிலும், தோத்தர் என மராத்தியிலும், லாச்சா என பஞ்சாபி மொழியிலும் மற்றும் மர்தாணி என உத்தரபிரதேசம் பீகார் டெராய் பகுதிகளிலும் வேட்டி எனத் தமிழிலும் அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை வங்காளதேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது.

பெரும்பாலும் தூய வெண்ணிறத்தில் வேட்டி இருக்கும். வெளிர்மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி எனப்படும். இவை திருமணங்கள் முதலிய விசேஷங்களில் பயன் படுத்தப்படுகிறது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்தில் ஆன ஜரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

வேட்டியில் 4 முழ வேட்டி, எட்டு முழ வேட்டி அல்லது இரட்டை வேட்டி கரை வேட்டி என பல வகைகளாகும். அரசியல்வாதிகள் தங்கள் வேட்டி கரைகள் தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவது அண்மைக்கால வழக்கமாக மாறி உள்ளது.

வேட்டியில் சிறுவர்கள்...
வேட்டியில் சிறுவர்கள்...www.giriblog.com

வேட்டி அணியும்போது அதனுடன் துண்டு அணியும் வழக்கம் உண்டு தமிழ் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் துண்டினை அணிந்திருப்பார்கள்.

ஆப்பிரிக்காவிலும் வேட்டி அணியப்படுகிறது பெரும்பாலான சோமாலியர்கள் மற்றும் அவ்வாறு இனத்தவர்கள் அணியப்படும் இந்த வேட்டிக்கு மகாவிசு என பெயரிட்டு உள்ளனர்.

வேட்டியை பளிச்சென்று அழுக்குப்படாமல் தும்பை பூ போல வெண்மை நிறத்தில் பராமரிக்க வேண்டும். வேட்டியில் கறைகள் பட்டால் நீலம் போட்டு வெந்நீரில் கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.

வேட்டியை கஞ்சி போட்டு கட்டி கொண்டால் மொட மொடப்போடு இருக்கும். வேட்டியை தினமும் அயன் செய்து கட்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அலர்ஜியால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளைத் தடுக்க சில ஆலோசனைகள்!
வேட்டி

வேட்டி நம் பாரம்பரிய உடை அதை நாம் வேட்டி தினம் அன்று மட்டும் கட்டாமல் தினமும் கட்டினால் வேட்டியை கைத்தறியாக நெய்து பிழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

கதர் வேட்டி, கைத்தறி வேட்டி என கையினால்  நெசவு செய்யப்பட்ட பலதரப்பட்ட வேட்டிகளை வாங்கி அணியலாம். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம். தமிழர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்துவோம் வேட்டியை அணிந்து அனுதினமும்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com