Dry shampoo
Dry shampoo

Dry Shampoo பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

Published on

வெளியில் செல்லும்போது நாம் எப்போதும் தலைக்கு குளிப்பதையே விரும்புவோம். ஆனால், தலைக்கு குளிக்காமலேயே முடியை தலைக்கு குளித்ததுபோல் புத்துணர்வோடு காட்டும் ஒன்றுதான் ட்ரை ஷாம்பு.

வெளியில் செல்லும்போது தலைக்கு குளிக்கவே விரும்பும் நாம், தினமும் வெளியில் சென்றால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா என்ன? அது முடியை பாதிக்குமல்லவா? அதற்காக அறிமுகமானதுதான் ட்ரை ஷாம்பு. நீங்கள் வெளியே செல்லும்போது தலைக்கு குளிக்கவே வேண்டாம். அதற்கு பதிலாக இந்த ட்ரை ஷாம்புவை பயன்படுத்தினாலே போதும். இதனை தலையில் பயன்படுத்தக் கூடாது. முடியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ட்ரை ஷாம்புவால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

1.   நாம் தலைக்கு குளிப்பதற்கு எப்போதும் கெமிக்கல் ஷாம்புவையே பயன்படுத்துவோம். ஆகையால், தினமும் வேலைக்கு செல்பவர்கள் தலைக்கு குளிப்பதை குறைத்துவிட்டு, ட்ரை ஷாம்புவை பயன்படுத்தினால், ஷாம்புவால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

2.  இது கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும் பார்ப்பதற்கு குளித்தது போன்ற உணர்வையும் கொடுக்கக் கூடியது. அதேபோல் தலைக்கு குளித்துவிட்டு வெளியில் போனால்கூட காற்றால் முடி பறந்து கலைந்துவிடும். ஆனால், இது பயன்படுத்தினால், உங்கள் கூந்தல் கலையாது. அப்படியே இருக்கும்.

3.  இந்த ட்ரை ஷாம்பு லாவண்டர், ரோஸ்மேரி போன்ற பல நறுமணங்களில் நமக்கு கிடைக்கிறது. ஷாம்புடன் ஒப்பிடும்போது இதன் வாசனை நீண்ட காலத்துக்கு நீடிக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் தலைக்கு குளிக்கவில்லை என்றால், கூந்தலில் ஒருவிதமான வாசனை வெளியாகும். ஆனால், இந்த ட்ரை ஷாம்பு பயன்படுத்தினால், அத்தகைய வாசனைகள் வராது.

4.   நமது கூந்தலில் இயற்கையான எண்ணெய் பசை இருக்கும். ஆனால், நீங்கள் தினமும் தலைக்கு குளிக்கும்போது அந்த எண்ணெய் பசை நீங்கிவிடும். இது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது நீங்கள் ட்ரை ஷாம்பு பயன்படுத்தினால், வெளியில் செல்லும்போது தலைக்கு குளிக்காமலையே தலைக்கு குளித்ததுபோன்ற புத்துணர்ச்சியை தரும்.

5.  நமது முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகிறது. குறிப்பாக பல ஷாம்புகளில் முடி முன்கூட்டியே நரைப்பதை தடுப்பதற்கான அத்தியாவசிய பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஆகையால் உங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
வெள்ளை சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி - எது உடலுக்கு நல்லது? 
Dry shampoo

6.  இதைப் பயன்படுத்தினால் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை கூந்தல் பளபளப்பாகவும் நறுமணத்துடனும் இருக்கும். உங்கள் உச்சந்தலை முதல் நுனிவரை உள்ள எண்ணெய் பசைகளை உறிஞ்சி கூந்தலை பளபளப்பாக வைக்கிறது. மேலும் தலையில் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. 

இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் ட்ரை ஷாம்புவில் உள்ளன.

ஆகமொத்தம், ட்ரை ஷாம்பு ஸ்ப்ரேக்கள் நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது மிகவும் ஆபத்துதான். தினமும் பயன்படுத்துவதையும், உச்சந்தலையில் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். நிகழ்ச்சிகளுக்கும், தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பதற்காகவும் மட்டும் ட்ரை ஷாம்புவை பயன்படுத்தவும்.

logo
Kalki Online
kalkionline.com