முகத்தில் பரு, கரும்புள்ளிகள் மறைய இவற்றை செய்தால் போதுமே!

beauty tips...
beauty tips...pixabay.com
Published on

ல்லோருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசைதான். அதற்கு இடையூறாக இருப்பது முகத்தில் ஏற்படும் பருக்களும் கரும்புள்ளிகளும் ஆகும். அவற்றை போக்கினால் பளிங்கு போல் ஆகும் முகம். அதைப் போக்கும் விதத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

* முள்ளங்கிக் கிழங்கு நசித்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் மோரில் கலக்கி முகத்தில் புள்ளி உள்ள இடங்களில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். 15 நாட்கள் அது போல் செய்தால் கரும்புள்ளி மறைய ஆரம்பிக்கும். 

* சந்தன கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி வர பரு, ஆக்கி ,படர்தாமரை, தேமல், வீக்கம், ஆகியவை தீர்ந்து முகத்தில் வசீகரமும், அழகும் உண்டாகும். 

* வேப்ப இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வர பரு, அம்மை கொப்பளம் ஆகியவை குணமாகும்.

அம்மான் பச்சரிசி இலை...
அம்மான் பச்சரிசி இலை...

* தூதுவளை பூவை காய்ச்சி பால் சர்க்கரை கலந்து 45 நாட்கள் பருக உடல் பலம்,முக வசீகரம், அழகும் பெறலாம். 

* அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்து விடும். பருவின் மீது தடவி வந்தாலும் பரு மாறும். 

* நன்னாரி வேர்ப் பொடியை தேனில் கலந்து , தேமல் உள்ள இடங்களில் தேய்க்க இவை மாறும். 

* நன்னாரி சர்பத்தை குளிர்ந்த நீரில் கலந்து அருந்த வேர்க்குரு, வேனல் கட்டிகள் வராமல் முக அழகை காக்கும்.

* துத்திச் செடியின் வேர் பட்டையை உலர்த்தி தூளாக்கி நல்லெண்ணெயில் குழப்பி முகத்தில் புள்ளி உள்ள இடங்களில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். 15 நாட்கள் இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறையும். 

* வேப்பிலைத் தோலை சலித்து அரை ஸ்பூன் நீரில் கலந்து புள்ளி உள்ள இடங்களில் 30 நாட்கள் தொடர்ந்து பூசி வரவேண்டும். 

* வெந்தயக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பருக்கள் மீது பூசி மூணு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். மூன்று நாட்கள் இப்படி செய்தால் முகப்பருக்கள் போய்விடும். 

வேப்பங்கொழுந்து, குப்பைமேனி தழை...
வேப்பங்கொழுந்து, குப்பைமேனி தழை...

* வேப்பங்கொழுந்து, குப்பைமேனி தழை, ஒரு துண்டு விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து பருக்கள் மீது பூசி மூணு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும் .மூன்று நாட்கள் இதே போல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

* புனுகு எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பருக்கள் மீது காலை, மாலை பூசி 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். 

இதுபோல் செய்து வந்தால் முகம்  வேர்க்குரு, தேமல், பரு, கரும்புள்ளிகளில் இருந்து விடுபட்டு அழகுடன் ஜொலிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com