பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அழகின் ரகசியங்கள் தெரியுமா?

Beauty secrets
Jhanvi kapoor
Published on

நமது தென்னிந்திய மயில் என்றழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் அழகின் ரகசியங்கள் மற்றும் அவரின் வரலாறு  பற்றி படிக்கலாம் வாங்க ரசிகர்களே!

ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி  மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு தங்கை இருக்கிறார். மேலும் அர்ஜூன்கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். 

ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். அவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். இந்தித் திரைப்பட துறைக்கு வரும் முன்பே அவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார் பார்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார்.              

அவர் தனது அழகு மெருகூட்டலுக்கு பெரிய பிரான்ட் அழகு சாதனங்களை உபயோகிப்பதில்லையாம். நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்கள் போதும் என்கிறார் இந்த அழகு நடிகை – நமது வீட்டில் பயன்படுத்தும் மஞ்சள் தூள், கடலை மாவு, தேன் மற்றும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும்  பொருட்களை பயன்படுத்தி தனது அழகை மெருகூட்டி கொள்கிறாராம்.

தனது சரும மென்மைக்கும் இந்த வகை பொருட்கள் போதும் என்கிறார் ஜான்வி. என்ன பொருட்கள் தெரியுமா?

மஞ்சள் தூள், தயிர், தேன் இவற்றோடு எலுமிச்சை சாறு சேர்த்த கலவை கலந்து தடவிக் கொண்டு படுத்தால் மறுநாள் காலை பளீச்-என மின்னும். தனது சருமம் வறண்டு போகாமல் தடுக்க நிறைய தண்ணீர் அருந்துகிறார். மேலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட லோஷன்கள் பயன்படுத்துகிறார்.

தனது மன அழுத்தத்தை குறைக்க அன்றாட இயல்பான வேலைகளில் ஈடுபட்டு அதை சமநிலைப்படுத்துகிறார்.   பிஸியான நாட்களிலும் கூட வீட்டின் அலங்காரத்தில் அவர் கவனம் செலுத்துவதால் மன அழுத்தம் குறைகிறது என்கிறார்.

ஜான்வி கபூர் எப்பொழுதும் இயற்கை அழகை கொண்டாடுவேன் என்கிறார். சொல்வதோடு மட்டுமல்ல செயலிலும் அதைக் கடைப்பிடிக்கிறார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com