ஃபேஷன் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'ஜம்ப்சூட்' ஆடைகள் (jumpsuit dress) !

jumpsuit dress
jumpsuit dresswww.womanandhome.com

‘ஜம்ப்சூட்’ என்பது ஒரே துணியால் ஆன ஆடையாகும். இதை முக்கியமாக தயாரித்ததன் காரணம், பேராசூட் மற்றும் ஸ்கை டைவிங் செய்யும்போது போட்டு கொள்வதற்கு சுலபமாகவும், குளிரிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காகவேயாகும்.

ஜம்சூட் போட்டுக் கொள்வதற்கு எடை குறைவாகவும், நெகிழ்வு தன்மையுடனும் இருப்பது அனைவரையும் கவர்ந்தது. எனினும் இது ஆடையுலகில் பெரிய புரட்சியை செய்யும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை. ஜம்ப்சூட்கள் டிரெண்ட் ஆனதைத் தொடர்ந்து இதில் பல வெரைட்டிகளை புகுத்தி விதவிதமாக ஆடைகளை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். அவற்றில் சில வகையான ஜம்சூட்களை பற்றி இன்று காண்போம்.

1. பார்மல் ஜம்ப்சூட்

பார்மல் ஜம்ப்சூட்
பார்மல் ஜம்ப்சூட்www.adriannapapell.com

பார்மல் ஜம்ப்சூட்டை அலுவலகத்திற்கு மட்டுமில்லாமல் திருமணம் போன்ற விஷேசங்களுக்கும் அணிந்து செல்லலாம். இது போன்ற ஜம்ப்சூட்டை குறைந்த அணிகலன்களுடன் அணிந்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும். இது போன்ற பார்மல் ஜம்ப்சூட்டை ஹீல்ஸ் செருப்புடன்அணிவது மேலும் வசீகர தோற்றத்தை தரும்.

2. டெனிம் ஜம்ப்சூட்

டெனிம் ஜம்ப்சூட்
டெனிம் ஜம்ப்சூட்www.meesho.com

டெனிம் ஜம்ப்சூட் மிகவும் ஸ்டைலான லுக்கை தரக்கூடியதாகும். இதை எந்த உடல்வாகு கொண்ட பெண்களும் அணிந்து கொள்ளலாம், மிகவும் அழகாக இருக்கும். இந்த வகை ஜம்ப்சூட்களை தினமும் அணிந்து கொள்ள பயன்படுத்தலாம். இத்துடன் ஷூ அணிவது சிறந்த லூக்கை தரும்.

3. பெல்டட் ஜம்ப்சூட்

பெல்டட் ஜம்ப்சூட்
பெல்டட் ஜம்ப்சூட்www.marksandspencer.i

ம்ப்சூட் போட்டுக்கொள்வது பிரபலமாகவும், ஃபேஷனாகவும் இருந்தாலும் குருகிய இடையுடையவர்கள் எதுவும் பொருந்தாமல் இருப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அதை போக்குவதற்காக தான் பெல்டட் ஜம்ப்சூட் இருக்கிறது. நிறைய பெல்டட் ஜம்ப்சூட்கள் சந்தையில் இருக்கிறது ஆடையோடு சேர்த்து வடிவமைக்கப்பட்ட பெல்டுடனோ அல்லது நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல பெல்ட்களை இதனுடன் இணைத்து அணிந்து மகிழலாம்.

4. பிளேர்டு ஜம்ப்சூட்

பிளேர்டு ஜம்ப்சூட்
பிளேர்டு ஜம்ப்சூட்www.fashionnova.com

ந்த வகை ஜம்ப்சூட்களில் கால்களில் பரந்த திறப்புகள் போன்று சற்று விரிந்த அமைப்புகளை கொண்டிருக்கும். இது போன்ற ஜம்ப்சூட்கள் ஸ்லீவ்லெஸ்ஸாகவே வரும். இது தங்கள் உடலை நீளமாக காட்ட வேண்டும் என்று விரும்புவோருக்கு ஏற்றதாகும். இந்த ஜம்ப்சூட்டை ஹை ஹீல்சூடன் சேர்த்து அணிந்து கொண்டால் அட்டகாசமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
காந்திநகரில் (குஜராத்) அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!
jumpsuit dress

5. தோத்தி ஜம்ப்சூட்

தோத்தி ஜம்ப்சூட்
தோத்தி ஜம்ப்சூட்ishnya.com

பாரம்பரிய உடையான குர்தீஸ்,சுடிதார் போன்ற உடையணிந்தவர்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி ஜம்ப்சூட்டில் உடை தேடினால் அவர்களுக்கு இந்த தோத்தி ஜம்ப்சூட் நன்றாகவே பொருந்தும். துப்பட்டாவுடன் உடலை சுற்றி அணியும்போது செம கிளாசிக்கான லுக்கைத் தரும்.

6. பாடிகான் ஜம்ப்சூட்

பாடிகான் ஜம்ப்சூட்
பாடிகான் ஜம்ப்சூட்www.pinterest.co

ந்த வகையான ஜம்ப்சூட்கள் ஒல்லியான உடலமைப்பு கொண்ட பெண்களுக்கு கச்சிதமாக இருக்கும். உடலோடு ஒட்டிய ஜிம் ஆடை போன்ற தோற்றத்தை தர கூடியது. பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த வகை ஜம்ப்சூட்கள் சிறந்த தேர்வாக அமையும்.

ஜம்ப்சூட்கள் தற்போதைய ஃபேஷன் உலகில் மிகவும் பிரபலமான ஆடையாக உள்ளது. ஒவ்வொருவரின் உடல்வாகை பொருத்து அதற்கு ஏற்ற வகையிலான ஜம்ப்சூட்கள் கிடைக்கிறது. ஜம்ப்சூட்களை பெண்கள் அணிவதற்கு தேர்வு செய்ய முக்கிய காரணம், இது அணிவதற்கு சவுகர்யமாகவும், எளிமையாகவும் உள்ளதாலேயாகும். முக்கியமாக ஜம்ப்சூட்கள் பெண்களுக்கு ஏற்ற எல்லா வகையான ஃபேஷன்களையும் பூர்த்தி செய்வதும் ஒரு காரணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com