
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் பாகுபாடின்றி எல்லோருக்கும் முடி உதிர்வது வேகமாக நடைபெறுகிறது. தலமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து இல்லாததுதான்.
நல்ல ஊட்டச்சத்தும், தலைமுடியில் அழுக்குகள் சேராமல் இயற்கையாகவே பராமரிக்கக்கூடிய இந்த ஷாம்பூ தயாரிக்க 3 பொருட்களே போதும். அது என்ன என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பூந்திக் கொட்டை - 6
வெந்தயம் - 2. டீஸ்பூன்.
அரிசி - 2 டீஸ்பூன்.
செய்முறை:
இந்த மூன்று பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியபின் அடுப்பில் வைத்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
நன்கு ஆறியதும், (இதனை இரவில் செய்யவும்.) பின் மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு நுரைத்து வரும் நீரை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
மீதி இருக்கும் சக்கையை தலைக்கு போட்டு பேக் போட்டு பின் வடிகட்டிய நீரை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும், முடி உதிர்வையும், முடி நுனி வெடிப்பைக் குறைத்து முடிவளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
பூந்திக்கொட்டையில் இருக்கும் சபோனின்கள் இயற்கை நுரைப்பானாக முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்பு சத்து, வைட்டமின்கள் ஏ, டி, இ, கே அனைத்தும் இதில் உள்ளது.
வெந்தயத்தில் உள்ள கெரட்டின் என்னும் புரதம் முடி இழைகளை வலுப்படுத்தும். முடிஉதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிகோடினிக் அமிலம் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை தூண்டும். லெசித்தின் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடியை வலுப்படுத்த உதவுகிறது. அமினோ அமிலங்கள் முடி ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான இரும்புச் சத்தும் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் முடிவேர்களை வலுப்படுத்த உதவுகிறது.
அரிசி நீரில் இனோசிட்டால் உள்ள ஒரு கார்போஹைட்ரேட் இருப்பதால் சேதமடைந்த முடியை சரிசெய்து முடியின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் பளபளப்பிற்கும் முக்கியமானது.
வைட்டமின் ஈ உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. அரிசியில் மெக்னீஷியம், துத்தநாகம் கொண்ட சில தாதுக்களும் உள்ளன. அவை முடி ஆரோக்கியத்திற்கு நல்ல நன்மை செய்யும்.
இந்த மூன்று பொருட்களின் கூட்டுச் சத்துக்கள் கூந்தலுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை ஊக்குவித்து ஆரோக்கியமான நல்ல அடர்த்தியான கூந்தலைப்பெற உதவும். இதனை செய்து பார்த்து கூந்தலை இயற்கையான ஷாம்பூ முறையில் செய்து தலைமுடி நன்கு பராமரியுங்கள்.