சரும அழகை பாதிக்கும் இவற்றையெல்லாம் கவனத்தில் வையுங்கள்!

சருமம் பாதுகாப்பு...
சருமம் பாதுகாப்பு...

ந்த வயதினராக இருந்தாலும் அந்த வயதுக்கு தகுந்தாற்போல் அழகாக காட்டிக் கொள்வதில் அனைவருக்குமே விருப்பம் உண்டு அழகு என்றால் முதலில் நம் கண் பார்வையில் படுவது நம்முடைய சருமம்தான். நமக்கு என்ன வயது என்பதை காட்டிக் கொடுப்பதும் அந்த சருமம்தான். சருமத்தில் விழும் சுருக்கங்களை வயதின் கோடுகள் என்று கூட சொல்வது உண்டு.

சரும அழகை பாதுகாப்பதற்கான பல்வேறு விதமான அழகுசாதன பொருட்கள் கடைகளில் மலிந்து உள்ளது. ஆனால் அவைகள் அனைத்தும் அனைத்து சருமத்திற்கும் ஒத்துப்போகுமா என்றால் அதுதான் இல்லை. ஏனெனில் சருமத்தில்  சாதாரண சருமம், எண்ணெய் சருமம் போன்ற பல வகைகள் உண்டு. அவற்றிற்கு தகுந்தாற்போல அந்த பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இதற்கு அழகு கலை நிபுணர்கள் உதவுவார்கள். ஆனால் அதே சமயம் பயன்பாட்டில் அதிகம் இருக்கும் பொருட்கள் சில அனைவருக்கும் ஏற்றதாக இல்லாமல் பாதிப்புகளை தருவதாக அமையும் அவைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

எலுமிச்சை
சாதாரணமாகவே எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். இந்த சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் சிலருடைய சருமத்திற்கு ஒத்துக் கொள்ளாமலா சருமத்தை பாதிப்படைய செய்யவும் கூடும்.

சருமத்தில் எரிச்சல், வெடிப்பு போன்ற பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடும். ஆகவே எலுமிச்சம் பழத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சரும அழகு பொருட்களை தகுந்த நிபுணரின் ஆலோசனையுடன்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். அதேபோல் எலுமிச்சை சாற்றினை  நேரடியாக சருமத்தில் அப்ளை செய்வதும் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும்.

சன் ஸ்கிரீன் க்ரீம் & லோஷன்
கோடை காலம் துவங்கி விட்டாலே அனைவரின் கவனமும் சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவதில் இருக்கும். வெயிலில் சருமம் கருமையாவதைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் உதவும். ஆனால் சருமம் கோடை காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் இம்மாதிரி சன் ஸ்கிரீன் லோஷன்களை அவரவர் சருமத்திற்கு ஏற்றது போல் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

துளைகளை அடைத்து விடும்
துளைகளை அடைத்து விடும்

அதேபோல் வெயிலின் தாக்கம் குறைந்ததும் விலை அதிகம் உள்ள சன் ஸ்கிரீன் லோஷன்ங்களை அடுத்த வருடத்திற்கு என்று சேமித்து வைப்பவர்களும் உண்டு. இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் ஏனெனில் நாம் பயன்படுத்திய லோஷன்கள் நமது கைகள் மற்றும் காற்று பட்டு நிச்சயம் தரம் குறைந்து இருக்கும். அதுமட்டுமில்லாமல் காலாவதி ஆகும் வாய்ப்புகளும் அதிகம். சருமத்தில் அரிப்பும் சரும பாதிப்புகளும் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்பதால் அழகு சாதனப் பொருட்களை நீண்ட வருடங்கள் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்...
தேங்காய் எண்ணெய்...

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் என்றாலே சருமத்திற்கு பொலிவு தரக்கூடிய ஒன்றுதானே என்று நினைப்போம். ஆனால் அதில் அடங்கியிருக்கும் லாரிக் அமிலம் ஒரு நிறைவுற்ற கொழுப்பு ஆகிறது. இது சருமத்தின் துளைகளை அடைத்து விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தேங்காய் எண்ணெயை முகத்திற்கு அப்படியே உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பார்வை கூர்மைக்கும் சரும மினுமினுப்புக்கும் அவசியம் உண்ணவேண்டிய காய்!
சருமம் பாதுகாப்பு...

உடலில் மற்ற பாகங்களில் தேங்காய் எண்ணெய் தடவி குளிப்பதால் எந்த சேதமும் கிடையாது. ஆனால் இயற்கையாகவே எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கவே கூடாது. மேலும் முகத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்யும்போது சருமத்துளைகளை அடைப்பதோடு அதனால்  எழும் முகப்பரு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆகவே இயற்கை என்றாலும் அவரவர் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.

கொசுறு டிப்ஸ் - எந்த சருமமாக இருந்தாலும் அடிக்கடி தூய தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது பாதிப்பற்ற சரும அழகுக்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com