ஃபேஷன் பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்களைத் தெரிஞ்சுக்கோங்க!

fashion dresses...
fashion dresses...Image credit - pixabay
Published on

ஃபேஷன் தொடர்பான பொருட்களை தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவை பலவிதமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

இறுக்கமான ஜீன்ஸ்; 

இறுக்கமான ஜீன்ஸ் அணியும்போது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி கீழ் உடலில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வுகளுக்கு வழி வகுக்கும்.  நரம்புகள் வீங்கிப் பருக்கும் நிலை ஏற்படும். இடுப்பைச் சுற்றி இறுக்கமான ஆடைகள் அணியும்போது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அழுத்தம் ஏற்படும். 

ஹை ஹீல்ஸ்; 

ஹை ஹீல்ஸ் அணியும்போது உடல் எடையை முன்னோக்கி நகர்த்துகிறது. உடல் தோரணையை மாற்றுவதால் முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு முதுகுவலி வரும். அபாயம் அதிகரிக்கும் மேலும் மூட்டுவலி, கணுக்காலில் காயங்கள் போன்றவை தோன்றலாம். 

கனமான கைப்பைகள்;

கனமான கைப்பையை தோளில் மாட்டிச் செல்லும்போது தோள்பட்டை மற்றும் கழுத்துவலி ஏற்படும். தசைப்பிடிப்பு, மேல் முதுகில்வலி மற்றும் முதுகுத்தண்டில் பாதிப்பு போன்றவை ஏற்படும். மேலும் கனமான பைகள் தோளில் உள்ள நரம்புகளை சுருக்க நேரலாம். 

ஷேப் வேர்

இறுக்கமான ஷேப் வேர் அணியும்போது வயிறு மற்றும் குடலை அழுத்தி அமில ரிஃப்ளக்ஸ், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் சுவாச பிரச்னைகள் போன்றவை ஏற்படும். 

பெரிய காதணிகள்;  

கனமான காதணிகள் காது மடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும். நிக்கல் அல்லது பிற எதிர்வினை உலோகங்கள் தோலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி எரிச்சல் அல்லது வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

இறுக்கமான டைகள் அல்லது காலர்கள்:

இறுக்கமான டை அல்லது காலர்கள் உள்ள உடைகளை அணிவது கழுத்து வலியை ஏற்படுத்தலாம். கண்களின் உட்பகுதி பாதிக்கப்படலாம். கிளைக்கோமா போன்ற கண் பிரச்னை உள்ளவர்களுக்கு ஆபத்தாக முடியலாம்.

பெரிய சன் கிளாஸ்கள்; 

கனமான பெரிய சன் கிளாஸ்கள் மூக்குக்கும் காதுகளுக்குப் பின்பும் அழுத்தம் தரும். இது அசௌகரியம் மற்றும் தலைவலிக்கு வழி வகுக்கும். பெரிதாக்கப்பட்ட பிரேம்கள் புறப்பார்வையை மறைக்கலாம். வாகனம் ஓட்டும்போது அல்லது நடக்கும்போது விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கும்.‌

கனமான கழுத்தணிகள் மற்றும் சோக்கர்ஸ்; 

கனமான நெக்லஸ் அல்லது இறுக்கமான சோக்கர்களை அணியும் போது கழுத்து தசைகளை கஷ்டப்படுத்தி அசௌகரியம்  மற்றும் தலைவலிக்கு  வழி வகுக்கும்.

இதையும் படியுங்கள்:
உணவு அருங்காட்சியகம் - இந்தியாவில் இருக்கிறதா?
fashion dresses...

செயற்கை நகங்கள் மற்றும் நக நீட்டிப்புகள்; 

சிலர் செயற்கை நகங்கள் அணிவது மற்றும் தங்கள் நகங்களை நீட்டிப்பு செய்து கொள்வார்கள். இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களை சரியாக பராமரிக்காமல் விடும் போது ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாவை சிக்கவைத்து பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். 

இறுக்கமான பெல்ட்களை அணிவது; 

இறுக்கமான பெல்ட், அடிவயிற்றை சுருக்கும். நெஞ்செரிச்சல் வீக்கம் போன்றவை ஏற்படும். உடலின் கீழ் பகுதியில் உணர்வின்மைக்கு வழி வகுக்கும். 

Belt...
Belt...Image credit - pixabay

இறுக்கமான தலைக்கவசங்கள் அல்லது தொப்பிகள்;

இவற்றை அணியும்போது உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படும். தலைவலி, மயிர்க் கால்களில் சேதம் ஏற்பட்டு முடி உதிர்தல் ஏற்படும். முதுகில் தசைப்பிடிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

இறுக்கமான காலுறைகள்; 

இவை ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம். மோசமான சுழற்சியின் காரணமாக நரம்புகள் வீங்கி பருத்து ரத்த உறைவு போன்ற நிலமைகளுக்கு வழிவகுக்கும். 

நீண்ட நேரத்திற்கு மேக்கப்பை அகற்றாமல் இருப்பது; 

மேக்கப்பை அகற்றாமல் நீண்ட நேரம் இருக்கும்போது அல்லது சரியான முறையில் மேக்கப்பை அகற்றாமல் விடும்போது அது முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தோல் எரிச்சலுக்கு வழிவகுக்கும். எனவே ஃபேஷன் தொடர்பான பொருட்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com