பழங்காலம் முதல் லேட்டஸ்ட் டிரெண்ட் வரை, தோடுகளில் இத்தனை வகைகளா?

பழங்காலம் முதல் லேட்டஸ்ட் டிரெண்ட் வரை...
பழங்காலம் முதல் லேட்டஸ்ட் டிரெண்ட் வரை...

“காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி” என்றெல்லாம் காதணிகளை வைத்து வந்திருக்கும் பாடல்களை கேட்டிருப்போம். அது என்ன லோலாக்கு? என்று எப்போதாவது யோசித்ததுண்டா? லோலாக்கு என்பது காதில் தொங்கவிடும் ஒரு அணி வகையாகும்.

ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான குண்டலகேசியும் காதுகளில் அணியக்கூடிய அணிகலனை குறிப்பதேயாகும். இதை ஆண்கள், பெண்கள் என்று இருபாலருமே அணிந்திருந்தார்கள் என்று கூறப்படுகிறது. மகாபாரதத்தில் கவச, குண்டலத்துடன் பிறந்தவன் கர்ணன் என்பது அனைவரும் அறிந்ததே!

காதுகளில் அணியப்படும் அணிகலன்களின் வகைகள், தோடு, கடுக்கண், ஓலை, பம்படம், மாட்டல், லோலாக்கு, குண்டலம், ஜிமிக்கி, மகர குழாய், கடிப்பு, கர்ணம், சார்பாய்பூ, தண்டட்டி, முடிச்சி, பிச்சார்க்கல், பூடி போன்றவையாகும்.

பாம்படம் மற்றும் தண்டட்டியை வயதான பாட்டிகளின் காதுகளில் காணலாம். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இவ்வகை அணிகலன்கள் பிரபலமானதாகும்.

பாம்படம்...
பாம்படம்...

பழங்காலத்தில் பனையோலைகளை சுருட்டி காதுகளில் உள்ள துளைகளில் காதணி போல அணிந்துக்கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இவ்வகை காதணிக்கு ‘காதோலை’ என்ற பெயரும் உண்டு.

இப்படி பலவகை காதணிகள் அணியும் பழக்கங்களை நம் முன்னோர்கள் வெகுநாட்களாகவே கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இப்போது இருக்கும் புதுவகை காதணிகளை பற்றி பார்த்தால், ஜிமிக்கி தற்போது உள்ள காதணிகளில் மிகவும் பிரபலமானதாகும். இது கேரளாவின் பாரம்பரிய காதணியாகும்.

முகலாய மன்னன் ஆட்சியில் ‘காரான்பூல் ஜூம்கா’ என்று வந்தது. அதன் அர்த்தம் காதுகளில் பூ போன்ற தோற்றம் கொண்ட காதணி என்று பொருள். இன்னும் அதனுடைய மணி போன்ற அமைப்புடனே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேஜூர்’ காதணி காஷ்மீரிய  பெண்கள்...
தேஜூர்’ காதணி காஷ்மீரிய பெண்கள்...

இதை பழங்காலத்து சோழர்களின் கோவில்களில் இருக்கும் சிலைகளும் அணிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘தேஜூர்’ என்னும் காதணியை காஷ்மீரிய பண்டிட் பெண்கள் தங்களுடைய திருமணத்திற்கு முதல் நாள் அணிவார்கள். இது பார்ப்பதற்கு நீளமான மற்றும் மெலிதான சங்கிலியை காதுகளில் அணிந்திருப்பது போன்று காட்சி தரும். இதை அணிவதால் அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தற்போது ஆண்களும் ஸ்டைலுக்காக கடுக்கனை ஒற்றை காதில் அணிந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இனி வாட்ஸ் அப் வெப்பிலும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்! 
பழங்காலம் முதல் லேட்டஸ்ட் டிரெண்ட் வரை...

‘மாட்டல்’ என்பது சங்கிலி போன்று காதுகளிலிருந்து  எடுத்து கொக்கி போல மாட்டிக்கொள்வதாகும். இது பெண்களிடம் மிகவும் பிரபலமான காதணியாகும்.

ராஜஸ்தானில் அணியப்படும் காதணியின் பெயர் குந்தன் புட்டியாகும். இது ஜிமிக்கி போன்றே வடிவத்தை கொண்டிருந்தாலும், முத்தும் கற்களையும் வைத்து செய்வதால் பார்ப்பதற்கு பாரம்பரிய உணர்வை கொடுக்கக்கூடியதாகும்.

‘சந்த்பாலி’ என்பது ஒரு பிரபலமான நிஜாம் காலத்தில் ஆரமித்த காதணி வகையாகும். ‘சந்த்’ என்றால் நிலா என்றும் ‘பாலி’ என்றால் காதணி என்றும் பொருள்.

ஆர்டெமிஸ் பிங்க்...
ஆர்டெமிஸ் பிங்க்...

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காதணி எது தெரியுமா? தி “ஆர்டெமிஸ் பிங்க்” என்று சொல்லக்கூடிய 16 கேரட் எடை கொண்ட பிங்க் நிற வைர தோடேயாகும். இந்த தோடு 57.4 மில்லியனுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போதுள்ள இளம் பெண்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள காதணி, ‘இயர் கப்’ ஆகும். இதை அப்படியே எடுத்து காதுகளில் பொருத்திக்கொள்ளலாம். இதை அணிவதால் நிறைய காதணிகளை கீழிருந்து மேலாக காதில் வரிசையாக அணிந்திருப்பது போல ஒரு மாய பிம்பத்தை உருவாக்கும்.

இதை ஒற்றை காதுகளில் மட்டுமே கூட அணிந்து கொள்ளலாம். இவ்வகை காதணியையே இப்போது பெண்கள் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com