சருமத்திற்கு எக்ஸ்பாலியேட் செய்வது பற்றித் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Exfoliate benefits on skin
Exfoliate benefits on skinImage Credits: Jil Goorman Beauty

ன்றைய காலக்கட்டத்தில் இளம் பெண்கள் சரும அழகிற்காக நிறைய பராமரிப்புகள் மேற்கொள்கிறார்கள். அதில் எக்ஸ்பாலியேட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எக்ஸ்பாலியேட் என்பது சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்க உதவுகிறது. இன்றைக்கு இந்த பதிவில் எக்ஸ்பாலியேட் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எக்ஸ்போலியேஷன் செய்வதால் ஆக்னே (Acne), பிக்மெண்டேஷன்(Pigmentation) குறையும். இந்த எக்ஸ்போலியேசனில்  AHA, BHA, PHA என்று நிறைய வகைகள் இருக்கின்றன. இதை முகத்தில் போடுவதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை கரைத்து கொண்டு வரும். அதனால் சருமத்தில் இருக்கும் துவாரத்தில் அடைப்புகள் நீங்கும். இதனால் Acne வை குறைக்கலாம்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதால் செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று சருமத்தில் உள்ள பிக்மெண்டேஷன் குறையும். இரண்டாவது புதிதாக செல்கள் உருவாவதால் நிறைய புதிய கொலாஜென்னும் உருவாகும். இதனால் Anti ageing நன்மைகள் கிடைக்கும்.

எக்ஸ்போலியேஷனுடைய நன்மைகள் என்னவென்றால், Anti ageing, anti pigmentation, Anti acne ஆகியவையாகும். இதில் இரண்டு வகை உண்டு ஒன்று கெமிக்கல் எக்ஸ்போலியேட் (chemical exfoliate) மற்றொன்று பிசிக்கல் எக்ஸ்போலியேட் (physical exfoliate).

பிசிக்கல் எக்ஸ்போலியேட் என்பது ஸ்க்ரப் போன்றவற்றை வைத்து சருமத்தில் தேய்த்து இறந்த செல்களை நீக்குவது. இதை பொதுவாக தடிமனாக இருக்கும் தோல்களிலே செய்வார்கள். கைகள், கால்களில் இருக்கும் இறந்த செல்லை நீக்க இப்படி செய்வார்கள்.

முகம் போன்ற மிகவும் சென்சிட்டிவான சருமத்திற்கு கெமிக்கல் எக்ஸ்போலியேட்டை பயன்படுத்துவார்கள். AHA- alpha hydroxy acids, BHA- beta hydroxy acids, PHA- poly hydroxy acids.

ஆல்பா ஹைடராக்ஸி ஆசிட்டில் லேக்டிக் ஆசிட்(lactic acid), மற்றும் கிளைக்காலிக் ஆசிட்டை (Glycolic acid) பயன்படுத்துவார்கள். பீட்டா ஹைடராக்ஸி ஆசிட்டில் பயன்படுத்துவது சாலிசில்லிக் ஆசிட் (Salicylic acid) ஆகும். இந்த ஒவ்வொரு வகையான எக்ஸ்பாலியேட்டரும் ஒவ்வொரு வகையான சருமத்திற்கு பயன்படுகிறது.

கிளைக்காலிக் ஆசிட் சாதாரண சருமம் உள்ளவர்களும், காம்பினேசனல் சருமத்தை உடையவர்களும் பயன்படுத்தலாம். கிளைக்காலிக் ஆசிட் உடைய Molecular weight குறைவு என்பதால் சருமத்தில் மிகவும் ஆழமாக சென்று செயல்படும். இதுபோன்ற ஆசிட்களை சருமத்தில் பயன்படுத்துவதால், கண்டிப்பாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகும். லேக்டிக் ஆசிட் மாய்ஸ்டரைசர் போன்று செயல்படும். Oily skin உடையவர்கள் 2% சாலிசில்லிக் ஆசிட்டை பயன்படுத்தலாம். மிகவும் சென்சிட்டிவ் சருமத்தை உடையவர்கள் Poly hydroxy acid பயன்படுத்தலாம்.

இதில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இதுபோன்ற ஆசிட்களை சருமத்தில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
லேட்டஸ்ட் டிசைன்களில் பெண்களுக்கான ‘ஸ்ரக்’ வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்!
Exfoliate benefits on skin

நம்முடைய சருமம் லேயராக இருக்கக்கூடியது. புதிதாக செல்கள் உருவாகும்போது அடியிலிருந்து உருவாகி மேலே வரும். இது நடப்பதற்கு 28 நாட்கள் ஆகும். அந்த சமயத்தில் நாம் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்யும்போது செல் வளர்ந்து வருவதற்கு முன்பே சுரண்டி எடுப்பதுபோல ஆகிவிடும். அதனால் கண்டிப்பாக எக்ஸ்போலியேட்டை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது சிறந்தது. முக்கியமாக எக்ஸ்போலியேட் செய்யும் நாட்களில் Retinoids பயன்படுத்தவே கூடாது. எக்ஸ்பாலியேட் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி உலர வைத்த பிறகு எக்ஸ்பாலியேட் சீரத்தை பயன்படுத்த வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் வைத்து கழுவி விடவேண்டும். அதன் பிறகு மாய்ஸ்டரைசர் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது சருமத்தில் மாற்றம் ஏற்படுவதைக் கண்கூடாக காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com