‘ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் சீரம்’ பற்றிய முழுமையான தகவல்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Benefits of hyaluronic acid
Benefits of hyaluronic acidImage Credits: Allure
Published on

மீபகாலமாக சருமப்பராமரிப்பில் ஹைலுரானிக் ஆசிட் மிகவும் பிரபலமாக உள்ளது. இது ஜெல், க்ரீம், சீரம் போன்ற வடிவத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதை பயன்படுத்துவதால், நம் சருமத்திற்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் (hyaluronic acid) நம்முடைய சருமத்தில் இயற்கையாகவே இருக்கக்கூடியதாகும். இதைப் பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். இதுவே நம்முடைய சருமத்தில் ஈரப்பதம் சீராக இருப்பதற்கான முக்கிய காரணமாகும்.

ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் நம்முடைய சருமத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் தன்மையை உடையது. அதே சமயம் சருமம் வறண்டு போகும் அளவிற்கு உறிஞ்சி வைத்துக்கொள்ளாமல் தேவையான அளவு மட்டும் உறிஞ்சி வைத்து கொள்ளும். ஹைலுரானிக் ஆசிட் அதனுடைய எடையை காட்டிலும் 1000 மடங்கு எடைக்கொண்ட தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.

ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் நம்முடைய சருமத்தில் இயற்கையாகவே உள்ளது என்பதால், இதனால் அலர்ஜி ஏற்படுவது குறைவு. அதனால் இதை எல்லா வயதினரும் பயன்படுத்தலாம். இதை காலை மற்றும் மாலை இருவேளை சருமப்பராமரிப்பு ரொட்டீனில் பயன் படுத்தலாம். அதன் பிறகு மாய்ஸ்டரைசர் மற்றும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.

குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்கள் ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் சீரத்தை போட்டுவிட்டு மாய்ஸ்டரைசர் கண்டிப்பாக போட வேண்டும். இல்லையெனில் சருமம் வறண்டது போன்ற உணர்வு ஏற்படும். ஹைலுரானிக் ஆசிட் சீரம் நம்முடைய சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும், சருமத்தை மென்மையாக்கும், ஏஜ்ஜிங் பிரச்சனைகளை குறைக்கும்.

சருமத்தில் ஏற்படும் சுருக்கம், கோடுகள் ஆகியவை இதை பயன்படுத்தும்போது நீங்கிவிடும். இது சூரியனால் நம் சருமத்திற்கு  ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது. சருமத்தில் ஏற்படும் காயத்தை குணப்படுத்தும் தன்மையை உடையது, சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்க பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'விட்டமின் சி' சருமத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது? முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க!
Benefits of hyaluronic acid

இப்போதுதான் புதிதாக சருமப்பராமரிப்பை தொடங்குபவர்கள் என்றால், ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் சீரத்தை மட்டுமே பயன்படுத்தலாம். ஹைலுரானிக் ஆசிட் 1 முதல் 2% பயன்பத்துவதே சிறந்தது. வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு ஹைலுரானிக் ஆசிட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது  Sodium hyularonate, sodium acetylide hyaluronate, hydrolyzed hyaluronic acid என்ற பெயர்களிலும் இருக்கும். விட்டமின் சி, ரெட்டினால் போன்றவற்றுடனும் ஹையலரானிக் ஆசிட்டை சேர்த்து பயன்படுத்தலாம். கிளேஸ் ஸ்கின் (Glass skin) வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக தொடர்ந்து ஹைலுரானிக் ஆசிட்டை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்ல பலனை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com