

எலுமிச்சை தோல் சருமத்திற்கு இயற்கையான ப்ளீச்சிங் தன்மை கொண்டது. ஸ்க்ரப், பவுடர் ஃபேஸ் மாஸ்க், டோனர், எசன்ஷியல் ஆயில், ஃபேஸ் பேக் போன்ற பல வடிவங்களில் பயன்படுத்தி இறந்த செல்களை நீக்கி, கருமை குறைத்து, முகத்தை பளபளப்பாக மாற்றலாம். சென்சிடிவ் சருமம், சூரிய ஒளி போன்றவற்றில் முன்னெச்சரிக்கை அவசியம் என கட்டுரை விளக்குகிறது.
எலுமிச்சை சாறில் எந்த அளவுக்கு பயன்பாடு இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் தோலையும் பயன்படுத்தலாம். குறிப்பாக முகஅழகை மேம்படுத்த அற்புதமான பொருள்தான் இந்த எலுமிச்சைதோல்.
எலுமிச்சை தோலில் இருக்கும் அமிலத்தன்மையால் சருமத்திற்கு நல்ல ப்ளீச்சிங் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தின் துளைகளுக்குள் ஆழமாக சென்று இறந்த செல்களை நீக்கும்.
சருமத்தில் உள்ள வீக்கங்களை குறைத்து முகத்தை பளபளப்பாக மாற்றும். தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் நன்கு மேம்படும்.
எலுமிச்சை தோலில் உள்ள பயன்கள்:
1. எலுமிச்சை தோல் ஸ்க்ரப்:
எலுமிச்சை தோல் - 2
சர்க்கரை -ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சை தோலை துருவிக்கொள்ளவும் அல்லது கொரகொரப்பாக அரைக்கலாம். இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து சருமத்தில் தடவவும். இது சருமத்துக்கு மிக சிறந்ததாக செயல்படும். இந்த ஸ்கிரப்பை முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு தடவவும்.
லேசாக விரல்களால் ஸ்க்ரப் செய்யவும். (கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தை விட்டு) 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.
2. எலுமிச்சை தோல் பவுடர் ஃபேஸ் மாஸ்க்:
எலுமிச்சை தோல் பவுடர் - இரண்டு ஸ்பூன்
தயிர் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் - ஒரு ஸ்பூன்
தேன் - ஒரு ஸ்பூன்
கற்றாழை ஜெல் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை தோல் பொடி அல்லது பிரஷ்ஷான தோலை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள், தயிர் மற்றும் தேன், அல்லது கற்றாழை ஜெல் சேர்த்தும் பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாகும்.
3. எலுமிச்சை தோல் டோனர்:
எலுமிச்சை பழத்தின் தோலை அல்லது எலுமிச்சை தோல் பொடி சிறிது நீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அது ஆறியவுடன் வடிகட்டி எடுத்து முகத்துக்கு கழுவினால் முகம் பளபளப்பாகவும் கிளியர் சருமமாகவும் மாறும்.
4. எலுமிச்சை தோல் ஆயில்:
எலுமிச்சை தோல் துருவியதை சிறிது பாதாம் ஆயில் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு வாரம் ஊறவிடவும்.
பின் அதை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடுபடுத்தி அந்த சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி நன்கு வாசனை வரும். அதன் பின் எண்ணெயை ஆறவிட்டு வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.
எலுமிச்சை தோல் எசன்ஷியல் ஆயில் தயார். இதை தினமும் குளிப்பதற்கு முன் சில துளிகள் எடுத்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு மசாஜ் செய்த பின் குளித்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளப்பாகும்.
5. எலுமிச்சை தோல் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை தோல் பொடி - ஒரு ஸ்பூன்
அரிசி மாவு -ஒரு ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் - ரெண்டு ஸ்பூன்
தேன் -ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலின் எலுமிச்சை தோல் பொடி சேர்த்து அதோடு அரிசி மாவு காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து இந்த மிக்ஸை முகத்தை கழுவிவிட்டு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
குறிப்பு:
எலுமிச்சை தோலை சருமத்துக்கு பயன்படுத்தும் முன் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இருந்தால் அரிப்பு எரிச்சல் ஏற்படலாம். அதனால் நேரடியாக எலுமிச்சை தோலை பயன்படுத்துவதை விட எலுமிச்சை பவுடரை நீரில் கலந்து பயன்படுத்துவது நல்லது.
எலுமிச்சை தோல் அல்லது பொடியை முகத்துக்குப் பயன்படுத்தும்போது நேரடியாக சூரிய ஒளிபடும்படி வெளியே போகக்கூடாது.
எலுமிச்சை தோலை பயன்படுத்தும் முன் சிறிது முகத்தில் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்தவும். தொடர்ச்சியாக சில முறை பயன்படுத்தி வந்தால் தான் முகம் பளபளக்கும் பொலிவாகும்.
இனி எலுமிச்சை தோலை தூக்கி எறிந்துவிடாமல் மேற்கண்ட வழிகளில் மிக எளிமையாக செலவு செய்யாமல் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும், நிறத்தை மேம்படுத்தவும், எலுமிச்சை தோல் பல அற்புதங்களை செய்யும்.
எலுமிச்சை தோல் இதில் உள்ள இயற்கை அமிலத்தன்மை மற்றும் ப்ளீச்சிங் தன்மையைப் பயன்படுத்தி பணச்செலவின்றி சரும கருமையை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும் எளிய 5 அழகு குறிப்புகளை வாசகர்கள் அறிந்துகொள்வார்கள்.