பக்க விளைவுகள் இல்லாத இயற்கையான ஃபேஷியல் சிலவற்றை பார்ப்போமா…?

ஃபேஷியல்...
ஃபேஷியல்...

பெண்களுக்கு அழகு என்றாலே அது பிரதானம் முக அழகுதான். இந்த முக அழகைப்பேண பெரும்பாலானோர் அட்டகாசமான விளம்பரங்களை நம்பி அதிகப்படியான பணத்தை செலவழித்து செயற்கையான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதன் விளைவு ஆரம்பத்தில் முகம் பளபளப்பாக தெரிந்தாலும் நாளடைவில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த செயற்கை அழகு சாதன பொருட்கள் அப்படி என்றால் முக அழகை கூட்ட என்னதான் வழி என்கிறீர்களா? இயற்கை ஃபேஷியல்களை பயன்படுத்தும் போது அது எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதில்லை.

 காய்கறி ஃபேஷியல்

கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் முகத்தில் உள்ள பருக்களை போக்கி மேடு பள்ளத்தை சரி செய்யும் தோலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது இந்த ஃபேஷியல்.

பழங்கள் ஃபேஷியல்

வாழைப்பழ ஃபேஷியல் செய்தால் அவை பாதிப்படைந்த சரும செல்களை சரி செய்யவும் முகப்பருக்களை போக்கவும் சருமத்தை இருக்க மடைய செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும். வாழைப்பழத்தின் நன்கு மசித்து அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.

 மாம்பழ ஃபேஷியல்

மாம்பழத்தை மசித்து அதில் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும் மாம்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால் சரும பிரச்னைகளான முதுமை தோற்றம் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும். சருமம் இறுக்கமடைந்து வறட்சி நீங்கும் முகம் பொலிவோடு இருக்கும்.

காய்கறிகள்
காய்கறிகள்

ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்

ஸ்ட்ராபெர்ரி பழத்தை தயிருடன் சேர்த்து கலந்து வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும். இது முகப்பருக்களை நீக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரி பெரிதும் துணையாக இருக்கும்.

 ஆரஞ்சு ஃபேஷியல்

சிட்ரஸ் பழங்களில்  ஆரஞ்சு பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால் வறட்சி இல்லாத சருமத்தையும் இளமையான தோற்றத்தையும் பெறலாம்.

 எலுமிச்சை ஃபேஷியல்

எலுமிச்சை அழகு பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று அதிலும் எலுமிச்சை ஒரு சரியான கிளின்சிங் பொருள் இதனை வைத்து முகத்திற்கு ஃபேஷியல் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு பொலிவான சருமத்தையும் பெற முடியும்.

 பப்பாளி பழ ஃபேஷியல்

பப்பாளிப்பழம் செலவில்லாத ஃபேஷியலை தரும் பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் பூசி கால் மணி நேரத்துக்கு பிறகு வெந்நீரில் முகத்தை கழுவினால் முகத்தை பளிச்சிட வைக்கும் .வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பப்பாளி தோலின் அடிப்பகுதியை தொடர்ந்து பூசினால் சருமம் நீரோட்டம் பெற்று பொலிவடையும்.

பப்பாளிப் பழம்
பப்பாளிப் பழம்

கணினி முன்னால் அதிக நேரம் வேலை பார்க்கும் பெண்கள், ஆண்கள் அனைவரும் கண்களின் மேல் வெள்ளியை வைத்துக் கொள்வது சிறந்தது விளக்கெண்ணெயும் தடவலாம் நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.

கற்றாழை கூழை முகத்தில் தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் இருப்பதால் பருக்கள் வராமல் தடுக்கலாம் கிருமி நாசினியான கற்றாழை தோல் சுருக்கங்களை தடுக்கிறது முகத்தில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு.

இதையும் படியுங்கள்:
புன்னகைத்துப் பாருங்கள் மகிழ்ச்சி மலரும்!
ஃபேஷியல்...

முகத்தை நிரந்தரமாக அழகுப்படுத்த வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள் கொய்யா நெல்லி மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழ வகைகளை உட்கொள்ள வேண்டும்.

 அதிகரிக்கும் மன அழுத்தம் முகப்பொலிவை பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வதும் அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com