குளிர்காலத்தில் உதடு வெடிப்பைத் தடுக்கவும், நிறத்தைப் பாதுகாக்கவும் சூப்பர் டிப்ஸ்!

beauty tips in tamil
lips care tips at home
Published on

குளிர்காலத்தில் உதடுகள் வறட்சியாவது சகஜமான விஷயம்தான். நிறைய தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் உதடுகளில் வெடிப்பு ஏற்பட காரணமாக இருக்கும். எனினும் இந்த பிரச்னைக்கு சுலபமான ஆயுர்வேத தீர்வுகள் இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று.

வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே சரி செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

சில சமயங்களில் உதட்டு வறட்சி விட்டமின் B3 குறைப்பாட்டினால் கூட வரலாம். உதடு வறட்சியாக இருக்கும்போது அதற்கு முக்கியமான தேவை ஈரப்பதம். அப்படி ஈரப்பதம் கொடுக்க கூடிய பொருட்களில் ஒன்று தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயை ஒரு சில துளிகள் எடுத்து தினமும் உதடுகளில் தடவுவதால் உதடுகளுக்கு உடனடி ஈரப்பதம் கொடுக்கும்.

உதட்டு வறட்சிக்கும் சரி சரும வறட்சிக்கும் சரி தேங்காய் எண்ணை அருமருந்தாகப் பயன்படுகிறது. சருமம் வறண்டு போகும் போது கூட சிறு துளிகள் தேங்காய் எண்ணையை தோல்களின் மீது தடவுவதால் உடனடி ஈரப்பதம் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்லை எடுத்து வைத்து கொண்டு அவ்வப்போது உதடுகளில் தடவி வருவது உதட்டு வறட்சியை போக்கும். கற்றாழை இயற்கையாகவே நமக்கு கிடைத்த வரபிரசாதமாகும்.

தூய பசு வெண்ணையை உதட்டில்  தடவுவது உதடு வெடிப்பை போக்கி உதட்டிற்கு ஈரப்பதம் தரும்.

தேன் இயற்கையாகவே கிடைக்க கூடிய அருமருந்தாகும். தேனையும் ரோஸ் வாட்டரையும் கலந்து உதடுகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடுவது சிறந்தது.

வேஸ்லின் என்னும் பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டு வறட்சிக்கு பயன்படுத்துவார்கள். இது சாதாரண மருந்து கடைகளிலேயே கிடைக்கும்.

இது மட்டுமில்லாமல் உதட்டை ஈரப்பதமாக வைத்து கொள்ளவும். உதடுகளில் வரும் வெடிப்பை போக்கவும் நிறைய லிப் பாம்கள் சந்தையில் வந்துள்ளது. இது சின்ன டியூபில் கிடைப்பதால் கைக்கு அடக்கமாக வைத்து கொண்டு உதடு வறட்சியடையும் போதெல்லாம் அவ்வபோது பயன்படுத்தி கொள்ளலாம். பயணம் செய்யும் போதும் எடுத்து செல்வதற்கு சுலபமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சருமம் பளபளக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் காலைவேளைப் பழக்கங்கள்!
beauty tips in tamil

உதடு வெடிப்படைவது தடுப்பதற்கான வழிமுறைகள்:

 · அதிகமாக தண்ணீர் அருந்தவேண்டும்.

· உதடுகளை அடிக்கடி தொட்டு கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டும்.

 · உதடுகளில் வறண்டு இருக்கும் தோலை உரித்து எடுக்க கூடாது.

 · லிப் பாம் அல்லது மாய்ஸ்டரைஸரை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.

சிவப்பான உதடுகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

பீட்ரூட்டை உதட்டில் தடவுவதால், உதடுகளில் இருக்கும் கருமையான நிறம் நீங்கி சிவப்பாக மாறும்.

பீட்ரூட் ஜூஸ், பால், தேன் மூன்றையும் சம பங்கில் ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளவும். இப்போது அந்த கலவையை உதட்டில் தடவி 30 நிமிடம் வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உதடுகள்  இயற்கையாகவே சிவப்பு நிறமாக மாறும்.

வீட்டிலேயே பீட்ரூட் லிப்பாம் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

பீட்ரூட்-1

தூய பசு வெண்ணை- தேவைக்கேற்ப எடுத்து கொள்ளவும்.

முதலில் பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். வெட்டி வைத்த தூண்டுகளை நன்றாக வேயிலில் காய வைக்க வேண்டும். பீட்ரூட் துண்டுகள் நன்றாக காய்ந்து வற்றல் போல உலர்ந்த பிறகு, அந்த வற்றலை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
சோர்வான கண்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட்மென்ட்! – கருவளையங்களை நீக்க இயற்கைக் குறிப்புகள்!
beauty tips in tamil

இப்போது அந்த பீட்ரூட் பொடியுடன் தூய பசு வெண்ணையை போதுமான அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

நன்றாகக் கலக்க அந்த கலவை கிரீம் போல மாறிவிடும். அந்த கலவையை சேமித்து வைத்துகொண்டு அவ்வப்போது உதடு வெடிப்புகளில் தடவி வருவதால், இயற்கையாகவே உதடுகள் சிவப்பாகவும் மிருதுவாகவும் மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.

-நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com