
லிப் மாஸ்க் என்பது உதடுகளில் உள்ள மென்மையான சருமத்தை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்க வடிவமைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான லிப் மாஸ்க் (உதடு முகமூடிகள்) ஹைட்ரஜல் அல்லது பிற ஈரப்பதத்தை தக்கவைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. இவை நன்மை பயக்கும் பொருட்களால் நிரம்பிய சீரம்களால் நிறைவுற்றவை. பொதுவாக இந்த முகமூடிகள் நம் உதடுகளின் விளிம்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. சில சமயங்களில் சுற்றியுள்ள பகுதிகளை மூடும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை ஆரோக்கியமான அளவு நீரேற்றத்தை பெறுவதற்கு உதவுகிறது.
லிப் மாஸ்க் என்றால் என்ன?
லிப் மாஸ்க் என்பது ஒரு தடிமனான, கிரீமி ஃபார்முலாவாகும். இது வழக்கமாக இரவு முழுவதும் வைக்கப்படும். லிப் ஆயில்கள் அல்லது வெண்ணெயுடன் ஒப்பிடும்போது தடிமனாக இருக்கும். இது ஷீட் மற்றும் க்ரீம் வகைகள் உட்பட பல்வேறு வகையான லிப் மாஸ்க்குகள் சந்தையில் கிடைக்கின்றன. லிப் மாஸ்க் என்பது உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும், சரி செய்வதற்கும், புத்துணர்ச்சியூட்டவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிகிச்சையாகும்.
பொதுவாக இரவு முழுவதும் அல்லது நீண்ட காலத்திற்கு பயன் படுத்தப்படும் லிப் மாஸ்க்குகள், அவற்றின் செறிவூட்டப்பட்ட பொருட்கள் மூலம் தீவிர சிகிச்சையை வழங்குகின்றன. இந்த மாஸ்க்குகள் பெரும்பாலும் ஜெல் அடிப்படையிலானவை. வெடிப்புள்ள உதடுகளை குணப்படுத்துவதில் திறன் பெற்றவை.
எப்படி பயன்படுத்துவது? (Lips health)
லிப் மாஸ்க்கை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. இதை தடவுவதற்கு முன்பு உதடுகளை நன்கு சுத்தம் செய்யவும். பிறகு முகமூடியை எடுத்து உதடுகளில் சமமாக பரப்பவும். 15 நிமிடங்கள் கழித்து அகற்றிவிடவும். ஆழமான வெடிப்புள்ள உதடுகளுக்கு லிப் மாஸ்க்குகள் சிறந்த தீர்வாகும். க்ரீம் சார்ந்த லிப் மாஸ்க்கை பயன்படுத்தினால், இரவில் அதை உதடுகள் முழுவதும் தடவி மறுநாள் காலையில் ஒரு காட்டன் பேடைப் பயன்படுத்தி மெதுவாக துடைக்கவும். லிப் ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தினால், அதை உதடுகளில் மெதுவாகத் தடவி பேக்கேஜிங்கில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்படியே வைக்கவும்.
கிரீம் அடிப்படையிலான லிப் மாஸ்க்குகளை தினமும் பயன்படுத்தலாம். இது உதடுகளை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் எந்த பக்க விளைவுகளையும் உண்டாக்காது. ஷீட் மாஸ்க்குகளை வாரத்திற்கு இரண்டு மூன்று முறை பயன்படுத்தலாம்.
லிப் மாஸ்க்குகளின் நன்மைகள்:
இவை சாதாரண லிப் பாம்களைவிட தடிமனான, ஊட்டமளிக்கும் பொருட்களைக் (வெண்ணெய் மற்றும் எண்ணெய்கள் போன்றவை) கொண்டு அதிக ஊட்டமளிப்பவையாக உள்ளன.
வறண்ட உதடுகளுக்கு அதிகபட்ச நீரேற்றத்தை வழங்குகின்றன. வறண்ட வானிலை மற்றும் கடுமையான சூழல்களில் கூட உதடுகளை பாதுகாத்து வெடிப்பதை தடுத்து சரி செய்வதுடன் மென்மையாக்கவும் உதவுகின்றன.
குறிப்பாக குளிர்காலத்தில் உதடுகள் அதிகமாக வறண்டு, வெடிப்புகள் ஏற்படும்போது இவை உதடுகளை மென்மையாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
லிப் மாஸ்க்குகளை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளின் நிறத்தை இளம் சிவப்பு நிறமாக மாற்றுவதுடன், மென்மையான பளபளப்பான தோற்றத்தையும் அளிக்கின்றன.
இவை உதடுகளின் தோலில் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து, மென்மையான மற்றும் மிருதுவான உணர்வை உருவாக்குகின்றன.