சரும ஆரோக்யத்தை பாதுகாப்பதற்கு ரசாயனம் கலக்காத இயற்கையான பொருட்களை கொண்டு பராமரிப்பது முக்கியம். இதற்கு தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று தாமரை எண்ணெய்.
தாமரையை நேரடியாக பயன்படுத்துவதை விட எண்ணெயாக பயன்படுத்தும்போது சருமத்தில் எளிதில் ஊடுருவும். இந்த எண்ணெய் தாமரை மலர்களை மட்டுமன்றி விதைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சரும பராமரிப்புக்கு தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
தாமரை எண்ணையில் உள்ள ஒலிகோசாக்ரைடு,சரும செல்களில் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் இளமைக்கு அவசியமான கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் ஆகியவற்றின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க உதவும்.
சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இதனால் செல்கள் புத்துயிர் பெறும். முகப்பரு, வடுக்கள் வராமல் தடுக்கிறது. தாமரை எண்ணெய் முகத்திற்கு மட்டுமன்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றும்.
சரும வறட்சியிலிருந்து காத்து தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை மீட்டுத்தரும். இந்த எண்ணையை நகங்களில் மேல் தடவஅவை உறுதியாகும். இந்த எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகளை மறையச் செய்யும். தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். இதில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
சருமத்தை பொலிவாக்கும் பாலாடை மாஸ்க்!
வீட்டில் எளிதாக கிடைக்கும் பாலாடை, பலவிதங்களில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு பாலாடை மாஸ்க் உபயோகிக்கலாம். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றும்.
அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும் .பாலாடையை சருமத்தில் பூசுவதன் மூலம் திசுக்களில் தேங்கி இருக்கும் முகப்பருவை உருவாக்கும் கிருமிகள் நீங்கும்.
பாலாடையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவினால் பேஷியல் செய்த பலனைத் தரும். பாலாடையை முகத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள மாசு, மருக்கள் நீங்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வர சரும வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்யமாக இருக்கும். எண்ணெய் தன்மை கொண்டவர்கள் சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போட்டு அலச சருமம் பளபளப்பாக ஆரோக்யமாக இருக்கும்.
பாலாடையை அப்படியே உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து பின் பயன்படுத்த சருமத்தின் பெரிய துவாரங்கள் சிறியதாகும். முகத்தில் எந்த மாசும் சேராமல் அழகு அதிகரிக்கும்.
ஒரு டீஸ்பூன் பாலாடையுடன் 1டீஸ்பூன் ம தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடத்தில் கழுவ முகம் பளிச்சென்று இருக்கும்.
இரண்டு ஸ்பூன் பாலாடையுடன், 2டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக ஃபேஷியல் செய்தது போல இருக்கும்.
1டீஸ்பூன் பாலாடையுடன்,1டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ தோல் மிருதுவாக மின்னும்.