
புடவை கட்டுவது எல்லா பெண்களுக்கும் பிடித்தமான விஷயம். தற்போது உள்ள இளம் பெண்கள் புடவைகளை பண்டிகை காலங்களில் மட்டுமே கட்டினாலும், பார்ப்பதற்கு ராயல் லுக்காகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். புடவை கட்டுவது நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதலில் கவனிக்க வேண்டியது பிளவுஸ் தான். இந்த 6 நிறத்தில் பிளவுஸ் தைத்து வைத்துக் கொண்டால் போதும் அதை பல புடவைகளுடன் மேட்ச் செய்து கட்டி அசத்தலாம். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
இந்த நிறம் எல்லா பெண்களுக்குமே மிகவும் பிடித்தமான நிறம். Bottle green பிளவுஸூடன் தங்க நிறத்திலான புடவை, பிங்க், பர்பிள், சிகப்பு, ராயல் ப்ளு இந்த நிறத்திலான புடவைகளை மேட்ச் செய்து அணிந்தால் நீங்கள் தான் ஹைலைட்டாக தெரிவீர்கள்.
பர்பிள் நிறத்தை ராயல் கலர் என்று சொல்வார்கள். நீங்கள் எங்காவது கிராண்டாக தெரிய வேண்டும் என்று நினைத்தால் பர்பிள் நிறத்தை அணியலாம். இந்த பர்பிள் நிற ஜாக்கெட்டுடன் லைட் கிரீன், மஞ்சள், ஆரஞ்ச், பிங்க் நிற புடவைகளை மேட்ச் செய்து அணியலாம்.
பெண்களுக்கு மிகவும் பிடித்த நிறமாக சொல்லப்படுவது பிங்க் நிறம். இதனுடன் ப்ளு, பர்பிள், சில்வர், பச்சை நிற புடவைகளை மேட்ச் செய்து கட்டினால் பார்ப்பதற்கு இளமையாக தெரிவீர்கள்.
சிவப்பு நிற பிளவுஸை சிகப்பு நிற புடவையுடன் மட்டுமே அணிய முடியும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிகப்பு நிற பிளவுஸை லைட் கலர் புடவை மற்றும் டார்க் நிற புடவை இரண்டிற்குமே அணியலாம். டார்க் ப்ளு, கிரீன், பர்பிள், வெள்ளை, கோல்ட் நிற புடவைகளுடன் தாராளமாக அணியலாம்.
இந்த நிறத்திற்கு ஏற்றார்ப்போல புடவையுடன் மேட்ச் செய்து கட்டினால் நல்ல ராயல் லுக் கொடுக்கும். ஸ்கை ப்ளு, ஆரஞ்ச், பிங்க், கோல்ட், காப்பர் நிறத்திலான புடவைகளை ராயல் ப்ளுவுடன் சேர்த்து அணியலாம்.
பொதுவாக பிளாக் நிற பிளவுஸ் எல்லோரிடமும் இருக்கும். இதை சாதாரணமாக காட்டன் துணியில் வாங்கி தைக்காமல், மல்டி எம்பிராய்டரி துணிகளில் தைத்து வைத்துக் கொண்டாலோ அல்லது பிளாக் கலர் வெல்வெட் பிளவுஸை வாங்கி வைத்துக் கொண்டாலோ புடவையுடன் சேர்த்து அணியும் போது நன்றாக இருக்கும். இந்த பிளாக் நிறத்தை சில்வர், கோல்ட், சிகப்பு, பர்பிள், ஆரஞ்ச் ஆகிய நிறத்துடன் சேர்த்துக் கட்டினால் பார்க்க புதுபுது புடவைகள் கட்டுவது போல தெரியும்.